தற்போது நடைபெற்று வரும் 13வது IPL போட்டித்தொடரில் ஜடேஜாவின் அபாரமான ஆட்டத்தை ரசிக்கும் நெட்டிசன்கள் 'Just Jadeja things' என்று அவரது சில சிறப்பான தருணங்களை பகிர்ந்து கொண்டாடுகின்றனர். அவற்றில் ஜடேஜாவின் அற்புதமான கேட்சுகள் இடம் பெற்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மோதலில் ரவீந்திர ஜடேஜாவை பாராட்டுகின்றனர் சமூக ஊடக பயனர்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13 வது பதிப்பில் சில நம்பமுடியாத கேட்சுகளை ரசிப்பதுடன், அவற்றை பிறருடன் பகிர்ந்து சிலாகிக்கும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை காண முடிகிறது. அதோடு இதற்காக பலர் ரவீந்திர ஜடேஜாவுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.  


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் Sunil Narine-ஐ 17 ரன்களில் திருப்பி அனுப்பினார்.  


அந்த அற்புதமான தருணத்தை விவரிக்க வார்த்தைகள் போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த ரசிகர்கள், சமூக ஊடகங்களில் புகைப்படங்களாக பகிர்ந்துள்ளனர்.






போட்டியில், முதலில் மட்டை வீச முடிவெடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தில் இறங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 20 முறை மோதிக்கொண்டன, எம்.எஸ். தோனியின் அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் கே.கே.ஆர் அணி வென்றுள்ளது. 


நம்ப முடியவில்லையா? படித்துப் பாருங்கள் | கொரோனா காலத்தில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையை கொடுக்கும் நாடு எது தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR