நாட்டை விட ஐபிஎல்லுக்கு வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்... கபில்தேவ் ஓபன் டாக்!
`நாட்டை விட வீரர்கள் ஐபிஎல் (Indian Premier League) போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பும்போது, நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆதங்கத்தை வெளிப்படுத்திய கபில்தேவ்.
புதுடெல்லி: "கிரிக்கெட் அணியை மேம்படுத்தும் புதிய திட்டத்தை" கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Control for Cricket in India) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பழம்பெரும் ஆல்ரவுண்டர் கபில்தேவ் (Kapil Dev) தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் இந்திய அணி செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, அதை சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆலோசனையை அவர் வழங்கியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவை உலக சாம்பியனாக்கிய அப்போதைய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ், ஐபிஎல் போட்டியை விட வீரர்கள் தேசிய அணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டி20 உலகக் கோப்பை 2021 சாம்பியன் (T20 World Cup 2021 Title) பட்டத்திற்கான வலுவான அணிகவும், போட்டியாளராகவும் இந்திய அணி கருதப்பட்டது. ஆனால் விராட் கோலி தலைமையிலான அணி "சூப்பர் சுற்று" நிலையிலேயே வெளியேற்றப்பட்டது. 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதியின் கதவுகளை மூடப்பட்டது. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியா நியூசிலாந்து, "இருந்த கொஞ்சம் நம்பிக்கை'க்கும் முற்றுப்புள்ளி வைத்தது. கோஹ்லியின் (Virat Kohli) இராணுவம், ஆரம்பத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தின் அணிகளிடம் தோல்விகளை சந்தித்தது, இது அரையிறுதிக்கு செல்லும் நம்பிக்கைக்கு பெரும் அடியாக இருந்தது.
ALSO READ | அரையிறுதியில் களமிறங்கும் 4 அணிகள்! வெற்றி வாய்ப்பு யாருக்கு?
ஐபிஎல்லை விட நாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: கபில்தேவ்
ஆசிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் வீரர்கள் பெருமைப்பட வேண்டும் என்று கபில்தேவ் கூறினார். அவர் ஏபிபி நியூஸிடம் பேசும் போது, "நாட்டை விட வீரர்கள் ஐபிஎல் (Indian Premier League) போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பும்போது, நாங்கள் என்ன செய்ய முடியும்? வீரர்கள் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்பட வேண்டும். அவர்களின் நிதி நிலைக் குறித்து எனக்குத் தெரியாது. அதனால் என்னால் அதிகம் சொல்ல முடியாது என்றார்.
தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்:
கோவிட்-19 தொற்றுநோய் (Covid-19 Epidemic) காரணமாக, ஐபிஎல் 2021 இன் இரண்டாவது கட்டம் டி20 உலகக் கோப்பை தொடருக்கு சற்று முன்பு நடைபெற்றது. கபில்தேவ் கூறுகையில், "முதலில் அணி என்பது நாடாகவும், பிறகு உரிமையாளராகவும் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஐபிஎல் விளையாட வேண்டாம் என்று நான் கூறவில்லை. ஆனால் இப்போது கிரிக்கெட்டை இன்னும் சிறப்பாக்குவது பிசிசிஐயின் பொறுப்பாகும். இந்த தொடரில் நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம். அதுவே மிகப்பெரிய பாடமாக இருக்கும் என்றார்.
ALSO READ | இந்திய அணியின் தோல்விக்கான 4 முக்கிய காரணங்கள்!
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவுடன் (India vs Namibia) இன்று (திங்கள்கிழமை) விளையாடுகிறது. டி20 வடிவிலான கேப்டனாக விராட் கோலி விளையாடும் கடைசி போட்டி இதுவாகும்.
வித்தியாசம் இருந்திருக்க வேண்டும்:
கபில் கூறுகையில், "ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை இடையே ஏதாவது வித்தியாசம் இருந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால், நமது வீரர்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்தாலும், அவர்களால் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை" என்றார்
ALSO READ | இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகிறார் ராகுல் டிராவிட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR