தோள்பட்டை காயம் காரணமாக IPL 2019 தொடரில் இருந்து வெளியேறிய கேதர் ஜதவ், தற்போது உடல் நலம் பெற்று உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டன் கேதர் ஜாதவ் அவ்வப்போது காயங்கள் கொண்டு அவதிப்பட்டு வருகின்றார். அந்த வகையில் 34-வயது ஆகும் இளம் வீரர் கடந்த மே 5-ஆம் நாள் IPL தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோள்பட்டையில் காயம் பெற்று தொடரில் இருந்தே வெளியேறினார்.


முன்னதாக உலக கோப்பைகான இந்திய அணியில் இடம்பிடித்த ஜாதவ், காயம் குணமாகி மீண்டும் அணிக்கு திரும்புவரா? என்ற கேள்வி இச்சம்பத்திற்கு பின் எழுந்தது. இந்நிலையில் தற்போது ஜாதவ் முழு தகுதியுடன் இருப்பதாக இந்தியா கிரிக்கெட் அணியின் பிசியோதெரப்பிஸ்ட் பர்கத் பாட்ரிக் அறிவித்துள்ளார்.


ஜாதவிற்கான உடற்தகுதி தேர்வு கடந்த 16-ஆம் தேதி நடத்தப்பட்டதாகவும், உடற்தகுதி தேர்வில் அவர் வெற்றி பெற்று விட்டதாகவும் பர்கத் பாட்ரிக் தெரிவித்துள்ளார். ஒரு வேளை கேதர் ஜாதவ் உடற்தகுதி பெற்றிருக்காவிடின் உலக கோப்பைகான இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம்பிடிப்பார் என செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.


மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றார். குறைந்த பந்தில் விரைந்து ரன் எடுக்கும் திறன் படைத்த ஜாதவ், பார்ட் டைம் பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு வருகின்றார். ஜாதவின் இடத்தை நிறப்ப ரிஷப் பன்ட் உதவுவார் என எதிர்பார்க்கப்பட்டது.


உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா கிரிக்கெட் அணி வரும் 22-ஆம் தேதி இங்கிலாந்து பறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.