Badminton: காத்திருக்கும் தங்கம்..! கைப்பற்றுவாரா ஸ்ரீகாந்த்?
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி கிடாம்பி ஸ்ரீகாந்த் வரலாறு படைப்பாரா? நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்பெயினில் டிசம்பர் 12 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வெல்வா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் இருவரும் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இது மகிழ்ச்சி என்றாலும், அரையிறுதியின் முடிவில் யாரேனும் ஒருவர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதாவது, இந்திய வீரர்களான கிடாம்பியும், லக்ஷயா சென்னும் எதிரெதிராக மோத வேண்டும்.
ALSO READ | CSK -வுக்கு திரும்ப அஸ்வின் விருப்பம்! கிரீன் சிக்னலை கண்டுகொள்வாரா தோனி?
இருவருக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் அனல் பறந்தது. ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் நீடித்த போட்டியில், கிடாம்பி வெற்றி பெற்றார். முதல் செட்டை லக்ஷயா சென்னிடம் இழந்தாலும், அடுத்தடுத்த இரு சுற்றுகளிலும் வெகுண்டெழுந்தார். முடிவில், 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
இதற்கு முன்னதாக ,1983 ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோனேவும், 2019 ஆம் ஆண்டு சாய் பிரனீத்தும் உலக பேட்மிண்டன் அரையிறுதியுடன் வெளியேறி இருந்தனர். இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் லோ கீன் யூவ் (Loh Kean Yew)-ஐ கிடாம்பி எதிர்கொள்கிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த இவர், முந்தைய சுற்றுகளில் தரவரிசையில் டாப் 5-ல் இருக்கும் வீரர்களை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இவரை வீழ்த்தும்பட்சத்தில், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் சொந்தக்காரராவார். 2019 ஆம் ஆண்டு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி பெருமை தேடி தந்தார்.
ALSO READ | இந்தியாவின் மிகவும் பலமிக்க கேப்டன் கோலி! ஏன்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR