இந்தியாவின் மிகவும் பலமிக்க கேப்டன் கோலி! ஏன்?

விராட் கோலியை மிகவும் சக்திவாய்ந்த ஒரு இந்திய கேப்டனாக சமூக ஊடகங்கள் மாற்றி உள்ளன.  

Written by - RK Spark | Last Updated : Dec 18, 2021, 02:22 PM IST
  • மற்றவர்களை போல் இல்லாமல் விராட் கோலி தனது பிரபல பின்பத்தை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்
  • உலக கோப்பையில் முகமது ஷமி மீது மத வெறி தாக்குதல் வந்த பொழுதும் எந்த வித தயக்கமும் இன்றி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்தியாவின் மிகவும் பலமிக்க கேப்டன் கோலி! ஏன்? title=

ஆரம்ப காலத்தில் தனது ஆக்ரோஷமான விளையாடினால் பெரும் எதிர்வினையை பெற்று வந்த கோலி பின்னாலில் அதை தனது பலமாக மாற்றி கொண்டார்.  கோஹ்லியை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் கிட்டத்தட்ட 267 மில்லியன் பேர் பாலோவர்ஸ்களாக உள்ளனர்.  குறிப்பாக இன்ஸ்டாவில் 173 மில்லியன் பாலோவர்ஸ் கொண்டுள்ளார்.  இது பங்களாதேஷின் மக்கள்தொகையை விட அதிகம். எப்போதும் கோலிக்கு எதிரான கருத்துகள் வரும்போது அவரது ரசிகர்கள் அவர் பின்பு தளபதிகளாய் நிற்கின்றனர்.  

ALSO READ | நான் கேப்டன் அல்ல என்பதை அவர்கள்தான் தீர்மானித்தார்கள் - விராட் கோலி

மற்றவர்களை போல் இல்லாமல் விராட் கோலி தனது பிரபல பின்பத்தை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்.  90களில் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.   அவரது புகழை பயன்படுத்தி கொள்ள அவருக்கு டெக்னாலஜி கைகொடுக்க வில்லை.  விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் இதற்க்கு முன் யாரையும் போலல்லாமல், தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார்.  உலக கோப்பையில் முகமது ஷமி மீது மத வெறி தாக்குதல் வந்த பொழுதும்,  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பற்றி பேசும் பொழுதும் எந்த வித தயக்கமும் இன்றி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். 

kohli

சச்சின்க்கு மைதானத்தில் செல்லும் போது அவரது ரசிகர்கள் கொடுக்கும் கரகோஷம் அவரது வலிமையை காட்டுகிறது.   அதே சமயத்தில் கோலி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஒரு பதிவு அதற்கும் அதிக வலிமையாக உள்ளது.  கடந்த செப்டம்பரில் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாகவும், ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருக்க விரும்புவதாகவும் கோலி அறிவித்த இன்ஸ்டா பதிவு கிட்டத்தட்ட 3 மில்லியன் லைக்குகளை பெற்றது. 

virat 

தனது ஒருநாள் கேப்டன் பதவி ரோஹித் சர்மாவிற்கு வழங்கப்பட உள்ளது என்பது டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பே தெரியும் என்று கோலி கூறியது உலகம் முழுதும் தீயாய் பரவியது.   வெளிநாட்டு வீரர்கள், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் என அனைவரும் கோலிக்கு தங்களது ஆராதவை வெளிப்படுத்தினர்.  பிசிசிஐ-யும் கோலி இவ்வாறு பொதுவெளியில் இதனை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.  தற்போது கோலிக்கு நடக்கும் விஷயங்களை பற்றி அனைவருக்கும் உடனடியாக தெரிய வந்து அவருக்கு மிகப்பெரிய ஆதரவும் கிடைக்கிறது.  இதே போல் சவுரவ் கங்குலி அல்லது மொஹிந்தர் அமர்நாத் விளையாடும் போது சமூக ஊடகங்கள் இருந்திருந்தால் இந்திய கிரிக்கெட் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.  

ALSO READ | கங்குலி - விராட் கோலி விவகாரம்! கடுப்பான முன்னாள் கேப்டன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News