IND vs ENG: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக விளையாடும் மூவேந்தர்ஸ்! யார் அவர்கள்?
இந்திய அணிக்காக விராட்கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா? என்ற சஸ்பென்ஸ் போட்டி தொடங்கும் வரை நீடித்தது. டாஸ் போட வந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளதாக அறிவித்தார். கடந்த போட்டியில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை - பாகிஸ்தான் வீரர் கருத்து!
2வது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியான நிலையில், அதற்கு மாறாக களமிறங்கியுள்ளார். விராட் கோலி களமிறங்கியதன் மூலம் சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவரும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளனர். விராட் கோலி களமிறங்கும் தகவலை ரோகித் சர்மா அறிவித்ததும் இணையத்தில் KING IS BACK என்ற சமூகவலைதளங்களில் ஹேஸ்டேக்குகள் பறந்தது.
மேலும் படிக்க | வைரலாகும் பும்ராவின் மனைவி வீடியோ
சில மணி நேரங்களுக்கு முன்பு தான் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கலாம் என கருதிய ரசிகர்கள், ஃபார்ம் இல்லாமல் இருக்கும் விராட் கோலி நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறக்கப்பட்டதன் மூலம் அவருக்கும் ஓய்வு தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். இந்த போட்டியிலாவது கோலி மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்த்து உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ