CSK vs KKR: கொல்கத்தா-க்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு!!
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
15:53 14-04-2019
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபில் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர். அதேபோல இரண்டாவது போட்டியில் ஹைதரபாத் மற்றும் டெல்லி அணியும் மோதுகின்றன.
ஐபில் தொடரில் 29வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த ஐபில் சீசனிலும் சிஎஸ்கே அணி தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். சென்னை அணி விளையாடிய ஏழு லீக் ஆட்டத்தில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளியுடன் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் கொல்கத்தா அணியை மீண்டும் பதம்பார்க்கும் முனையில் சென்னை அணி விளையாடக்கூடும்.
கொல்கத்தா அணியை பொருத்த வரை ஏழு லீக் ஆட்டத்தில் ஆடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்து உள்ளது. கொல்கத்தா அணி மிகவும் சார்ந்திருக்கும் ஆண்ட்ரே ரசல் இன்றைய போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது, ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆடினார். காயம் ஏற்ப்பட்டும் தொடர்ந்து ஆடியதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் எனத்தெரிகிறது.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியின் எம்.எஸ். தோனியின் வியூகத்தை சமாளிப்பாரா கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் என்பதை ஆட்டத்தில் பார்ப்போம்.