ஐபிஎல் 2021ல் இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.  முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை அணி இடம் தோல்வியுற்ற டெல்லி இந்த போட்டியில் வெற்றி பெற்று பைனலுக்கு செல்ல மும்முரமாக விளையாண்டது.  டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி அணியின் ஓபனிங் பேட்டிங்  மந்தமாக அமைந்தது.  பிரித்திவிஷா 18 ரன்கள், தவான் 36 ரன்கள் அடித்து வெளியேறினர்.  அதன்பின் களமிறங்கிய டெல்லி அணியின் அனைத்து வீரர்களும் டெஸ்ட் இன்னிங்ஸ் போன்று மெதுவாக விளையாடினர்.  ஸ்டாய்நிஸ் 23 பந்துகளில் 18 ரன், ஸ்ரேயஸ் ஐயர் 27 பந்துகளில் 30 ரன், பண்ட் 6 பந்துகளில் 6 ரன்களுக்கு வெளியேறினார்.  இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே அடித்தது.  கொல்கத்தா அணியின் பவுலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசி ரன்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தனர். 


 



எளிமையான இலக்கை எதிர்த்து ஆடிய கொல்கத்தா அணியின் ஓபனிங் பார்ட்னர்ஷிப் மாஸாக ஆக அமைந்தது.  அதிரடியாக விளையாடிய வெங்கடேச ஐயர் 41 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார்.  3 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.  மறுபுறம் நிதானமாக ஆடிய சுப்பன் கில் 46 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார்.  நித்திஷ் ராணா 12 பந்துகளில் 13 ரன்கள் அடித்து வெளியேறினார்.  


3 ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணி இருந்தது.  குவாலிபையர் போட்டி போன்று இல்லாமல் போட்டி ஒரு பக்கமாகவே சென்றது.  18-வது ஓவரை வீசிய ரபாடா சிறப்பாக பந்து வீசி ஒரு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.  19-வது ஓவரை சிறப்பாக வீசிய நோர்தே மூன்று ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மோர்கனின் விக்கெட்டை வீழ்த்தினார்.  வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்த கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.


 



கடைசி ஓவரை வீசிய அஸ்வின் ஷகிப் அல் ஹசன் மற்றும் சுனில் நரைன் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார்.  இரண்டு பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை என போட்டி டெல்லியின் பக்கம் திரும்பியது.  சூப்பர் ஓவர் வருமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 19.5 பந்தில் ராகுல் திரிபாதி சிக்சர் அடிக்க எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் மிகவும் சிரமப்பட்டு பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா.  போட்டி கையைவிட்டு போனது என்று நினைத்த டெல்லி ரசிகர்களுக்கு கடைசி மூன்று ஓவர் எப்படியாவது பைனலுக்கு சென்று விடலாம் என்ற நினைப்பு வந்தது.  ஆனாலும் அது கடைசியில் நிறைவேறாமல் சென்றது.  இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் வரும் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பைனலில் மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.


 



ALSO READ உலக கோப்பை அணியில் இடம் பிடித்த சர்துல் தாக்கூர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR