உலக கோப்பை அணியில் இடம் பிடித்த சர்துல் தாக்கூர்!

டி 20 உலக கோப்பை அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக சர்துல் தாக்கூர் இடம் பிடித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Oct 13, 2021, 05:55 PM IST
  • இந்திய அணி அறிவிக்கபட்ட போதே ஐபிஎல் முடிந்த பின்பு அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க பட்டது.
  • தற்போது இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் இடம் பிடித்துள்ளார்.
உலக கோப்பை அணியில் இடம் பிடித்த சர்துல் தாக்கூர்!  title=

உலக கோப்பை டி20 இந்த மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது.  கடந்த மாதம் 29ம் தேதி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ.  கோலி தலைமையிலான இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பின் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.  மேலும் இளம் வீரர்களான இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் போன்றோர் இடம் பிடித்தனர்.  யாரும் எதிர்பார்க்காதவிதமாக தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 

இந்திய அணி அறிவிக்கபட்ட போதே ஐபிஎல் முடிந்த பின்பு அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க பட்டது. அதனை போலவே தற்போது இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் இடம் பிடித்துள்ளார்.  ஐபிஎல்ல் சிஸ்க்கே அணியில் விளையாடும் இவர் முக்கியமான நேரங்களில் விக்கெட்களை எடுத்து வருகிறார்.  மேலும் பேட்டிங்கிலும் அசத்தும் சர்துல் ஆல் ரவுண்டராக கருதப்படுகிறார்.  ஐபிஎல் 2021ல் 15 போட்டிகளில் 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் சர்துல். 

ALSO READ அந்த மனசு இருக்கே! Mentorக்கு சம்பளம் வாங்காத தோனி!

ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் படேல் ஆகியோர் கூடுதல் வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.  தற்போது ஐபிஎல் 2021ல் கலக்கி வரும் அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கர்ன் சர்மா, ஷாபாஸ் அகமது மற்றும் கே.கவுதம் ஆகியோர் நெட் பவுலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின் , ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

காத்திருப்பு வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்ஸர் படேல்

ALSO READ உலக கோப்பை போட்டிக்கான புதிய Jersey வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News