ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியினில் இந்தியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி ரசிகர்கள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

22 வயதான இந்தியாவின் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்று நடைப்பெற்ற போட்டியினில் மேத்யூ வாடே, ஆஷ்டன் ஆசர், கம்மின்ஸ் ஆகியோரை தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி தனது ‘ஹாட்ரிக்’ சாதனையை பதிவு செய்தார்.


இவரின் இந்த சாதனை வீடியோ தற்போது இனையத்தில் வைரலாக பரவி வருகின்றது.


 



 


இதற்கு முன்னதாக இந்தியா தரப்பில் நியூசிலாந்துக்கு எதிராக சேத்தன்சர்மா (1987, நாக்பூர்), இலங்கைக்கு எதிராக கபில்தேவ் (1991, கொல்கத்தா), ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.