கனடா ஓபன் 2023: பிவி சிந்து தோல்வி; தங்கம் வெல்வாரா லக்ஷ்யா சென்?
Canada Open 2023: கனடா ஓபன் 2023இல், இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய பேட்மிண்ட வீரர் லக்ஷ்யா சென். ஆனால், பிவி சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்
கனடா ஓபன் 2023 இல், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை நேர் கேம்களில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லக்ஷ்யா சென். ஆனால், அகானே யமகுச்சிக்கு எதிரான போட்டியில் சிந்து தோல்வியடைந்தது இந்தியாவிற்கு பின்னடைவு ஆகும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற லக்ஷயா சென், நடைபெற்று வரும் கனடா ஓபன் 2023 ஆடவர் ஒற்றையர் போட்டியின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து சனிக்கிழமை நடந்த அரையிறுதியில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் தோல்வியடைந்தார்.
அரையிறுதியில் லக்ஷ்யா 21-17, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார். உலகின் 11வது வரிசை ஷட்லருக்கு எதிராக சென் முற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார்.
உலகின் 19வது வரிசை ஷட்லர் ஆட்டத்தை வெல்வதற்காக தனது வேகத்தை தொடர்ந்தார். லக்ஷ்யா அடுத்த ஆட்டத்தில் தனது வேகத்தைத் தொடர்ந்தார், 44 நிமிடங்களில் போட்டியில் வென்றார் லக்ஷ்யா சென்.
மேலும் படிக்க | பிறந்தநாளை தனது 'செல்லங்களுடன்' கொண்டாடிய தோனி... அவரே பகிர்ந்த வீடியோ இதோ!
கனடா ஓபன் 2023
கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர், பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் போட்டியாகும். நடப்பாண்டு நடைபெறும் நான்காவது, சூப்பர் 500 தொடர் இதுவாகும். இந்திய அணியில், மகளிர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் ஆடவர் பிரிவில் லக்ஷயா சென் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.
அதில் தற்போது பி.வி சிந்து போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், ஆடவர் பிரிவில் லக்ஷ்யா சென் தங்கப் பதக்கத்தை நோக்கி முன்னேறுகிறார்.
இறுதிப்போட்டியில் லக்ஷயா சென்
உலக தரவரிசையில் 19வது இடத்தில் உள்ள லக்ஷயா சென், கடந்த ஓராண்டில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற, காமன் வெல்த் தொடரில் தான் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், நடப்பாண்டு ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரில் சாம்பியனில் சீனாவை சேர்ந்த லி ஷிஃபெங்கை எதிர்கொள்கிறார் லக்ஷ்யா சென்.
கனடா ஓபன் 2023 இல் இருந்து வெளியேறிய பி.வி. சிந்து
மகளிர் பிரிவின் அரையிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், 14-21, 15-21 தோல்வியடைந்த பி.வி.சிந்து, தொடரில் இருந்து வெளியேறினார். இதற்கு முன்னதாக, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் யமாகுச்சியிடம் சிந்து தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்காக போராடும் சிந்து
கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த சிந்து சிகிச்சைக்குப் பின்பு, கடந்த ஜனவரி மாதம் சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார். அதன்பிறகு 11 தொடர்களில் பங்கேற்று, 3 தொடர்களில் மட்டும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், ஒரு தொடரில் கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. கடைசியாக கடந்தாண்டு நடைபெற்ற காமன் வெல்த் தொடரில் மட்டுமே சிந்து சாம்பியன் பட்டம் வென்று இருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ