லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி என்பவர் அர்ஜென்டினாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் ஆவர். இவர் தற்போது லா லிகா அணி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவைகளுக்காக விளையாடி வருகிறார். மேலும் இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக மெஸ்ஸி கருதப்படுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இளம் வயதிலேயே பல விருதுகளுக்கான, குறிப்பாக FIFA விருதுக்கான பரிந்துரையினை பெற்றவர் மெஸ்ஸி. இதனையடுத்து கால்பந்தாட்டத்தின் சாதனையாளராக கருதப்படும் டீகோ மாரடோனா என்பவர் இவரை தன்னுடைய வாரிசாக அறிவித்து பெருமை சேர்த்துள்ளார். 



சிறிது காலத்திலேயே,  அர்ஜென்டினாவின் சீனியர் அணியில் மிக முக்கியமான ஒரு உறுப்பினராக மாறினார் மெஸ்ஸி. 2006 -ம் ஆண்டில், FIFA உலகக்கோப்பையில் விளையாடியதன் மூலமாக, அந்த போட்டியில் கலந்து கொண்ட மிக இளம் வயது அர்ஜென்டின வீரர் என்ற பெருமையயினையும் பெற்றார்.



மேலும், அர்ஜென்டினா ஒலிம்பிக் கால்பந்து அணியுடன் இணைந்து ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தினையும் வென்றார். இந்நிலையில் அவரது இளம் வயது வீடியோ ஒன்று நியூவெல் இங்கிலிஷ் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது நியுவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணியில் வெற்றி பெற்ற பிறகு அளித்த பேட்டியாகும்.  மேலும் இது இளம் வயதில் இவர் அளித்த முதல் பேட்டி என்று கருதப்படுகிறது. அந்த வீடியோவில் தற்போது உலகப் புகழ் பெற்றிருக்கும் கால்பந்து வீரர்களின் பெயர்களும் இடம் பெறுகிறது.


ALSO READ பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் முன்னுள்ள சவால்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR