Olympic Medals in India: உலக அளவில் ஒட்டுமொத்த இந்திய நாட்டை தலைநிமிர செய்து வரலாற்று சாதனை படைத்து வருகிறார்கள் இந்தியாவின் தங்க மங்கைகள். இன்று ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலம் வென்று இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கத்தை பெற்று தந்துள்ளார். இதுவரை இந்திய சார்பில் வென்ற மூன்று பதக்கங்களையும் நமது பெண்களே வென்றிருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய சார்பில் ஒலிம்பிக் பதக்கங்களை (Olympic Medals) வென்றுள்ள பட்டியலில் மீராபாய், சிந்து மற்றும் லவ்லினா மூவரும் இடம் பெற்றுள்ளனர். 


முதலில் இந்தியாவுக்கு பளுதுாக்குதலில் மீராபாய் சானு (Mirabai Chanu) வெள்ளி பதக்கம் வென்றார். இவர் பெண்கள் பளு தூக்கும் 49 கிலோ எடை பிரிவில் (Women's 49kg Weightlifting) வெள்ளிப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.


டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டனில் (Women's singles·Badminton) பி.வி. சிந்து (PV Sindhu)வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் தோல்வியை தழுவிய பி.வி. சிந்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிங்ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றார். முன்னதாக இவர் 2016 பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.


ALSO READ | Tokyo Olympic 2020: இந்தியாவுக்கு 3வது பதக்கம்; வெண்கலம் வென்றார் லவ்லினா


இன்று நடைபெற்ற பெண்களுக்கான குத்துச்சண்டை வெல்டர் வெயிட் எடைப் பிரிவில் (Women's welterweight Boxing) அரையிறுதிப் போட்டியில், துருக்கியின் புசெனாஸ் சர்மெனேலி 5-0 என்ற கணக்கில் லவ்லினாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.  இருப்பினும் அரையிறுதி வரை முன்னேறியதால் லவ்லினாவுக்கு (Lovlina Borgohain) வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இவரால் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை லவ்லினா படைத்துள்ளார். இவருக்கு முன்பு மேரி கோம், விஜேந்தர் சிங் ஆகியோருர் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Tokyo Olympics: பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்


ஒலிம்பிக் போட்டிகளில் (Olympic Games Tokyo 2020) பதக்கம் வென்றுள்ள இந்திய தங்க மங்கைகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க வேட்டை துவங்கியது, வெள்ளி வென்றார் மீராபாய் சானு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR