14:18 12-10-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டௌர்விச் 30(63) ரன்களில் உமேஷ் வீசிய பந்தில் LBW ஆனார்!



தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 65 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்துள்ளது. ராட்சன் சேஷ் 50(81) மற்றும் ஹோல்டர் 10(20) ரன்களுடன் களத்தில் உள்ளார்!


இந்தியா அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட், உமேஷ் 2 விக்கெட் மற்றும் அஷ்வின் 1 விக்கெட் எடுத்துள்ளனர்!



இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்!


இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சினை சமாளிக்க மேற்கிந்திய தீவுகள் அணி பெரும்பாடு பட்டு வருகின்றது. 


இப்போட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திதீவுகள் அணி ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கிரன் பவுள் 22(30), பர்த்வொயிட் 14(68) ரன்களில் வெளியேற பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் 36(68) ரன்களில் வெளியேறினார்.


ஹெட்மையர் 12(34), சுனில் அம்பிரிஷ் 18(26) ரன்களில் வெளியேற ராட்சன் சேஷ் நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்து வருகின்றார். இந்திய அணி தரப்பில்  குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை குவித்துள்ளார், உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.



தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 57 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது. ராட்சன் சேஷ் 43(60) மற்றும் டௌர்விச் 24(56) ரன்களுடன் களத்தில் உள்ளார்!