IPL 2024 Auction Updates : ஐபிஎல் ஏலம் கோலாகலமாக நிறைவடைந்தது
IPL 2024 Auction Update News in Tamil: 17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த உடனடி தகவல்களை இதில் காணலாம்.
IPL 2024 Auction Updates, IPL Team Players Auction: ஐபிஎல் என்றாலே பலருக்கும் டக்கென நியாபகம் வருவது ஏலம்தான். கிரிக்கெட் வீரர்களை ஏலம் மூலம் எடுப்பதை 2008ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் நடைமுறையில் இருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அணிகள் மொத்தமாக கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்படும். இதற்கிடையில் ஒவ்வொரு சீசனுக்கும் முன் மினி ஏலம் நடைபெறும்.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ள 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் இன்று நடைபெறுகிறது. வெறும் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் கடும் போட்டியில் ஈடுபடுகின்றனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், இந்திய பேட்டர்கள், இந்திய ஆல்ரவுண்டர்கள், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் என ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு தேவைகள், வெவ்வேறு இடங்களில் உள்ளன.
தற்போது தேசிய அணிக்காக விளைாடிய வீரர்களுக்கான (Capped Players) ஏலம் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, தேசிய அணிக்கு விளையாடாத வீரர்களுக்கான (Uncapped Players) ஏலம் அடுத்து நடைபெற உள்ளது. ஐபிஎல் மினி ஏலம் குறித்த உடனடி தகவல்களுக்கு இந்த பக்கத்தை பின்தொடருங்கள்.
Latest Updates
IPL 2024 Auction Updates : ஐபிஎல் ஏலம் கோலாகலமாக நிறைவு
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 ஏலம் கோலாகலமாக நிறைவடைந்தது.
IPL 2024 Auction Updates: மும்பை வாங்கிய ஷிவாலிக் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணி ஷிவாலிக் ஷர்மா என்ற இளம் வீரரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
IPL 2024 Auction Updates: மும்பை வாங்கிய ஷிவாலிக் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணி ஷிவாலிக் ஷர்மா என்ற இளம் வீரரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
IPL 2024 Auction Updates: ஆர்சிபி வாங்கிய இளம் ஆல்ரவுண்டர்
ஆர்சிபி அணி ஸ்வப்னில் சிங் என்ற இளம் ஆல்ரவுண்டரை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது
IPL 2024 Auction Updates: சிஎஸ்கே வாங்கிய அவினாஷ் ராவ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரரான அவினாஷ் ராவ ஆரவல்லி என்ற இளம் வீரரை 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு வாங்கியது.
IPL 2024 Auction Updates: ஆர்சிபி கேட்டு வாங்கிய சவுரவ் சவுகான்
ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாமல் இருந்த சவுரவ் சவுகான் என்ற இளம் வீரரை 20 லட்சம் ரூபாய்க்கு கேட்டு வாங்கி ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி அணி
IPL 2024 Auction Updates: லக்னோவில் அர்ஷத்கான்
லக்னோ அணி 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் வாங்கியது
IPL 2024 Auction Updates : மும்பை அணியில் முகமது நபி
ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியை 1.50 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது
IPL 2024 Auction Updates : கேகேஆர் அணியில் முஜ்பூர் ரஹ்மான்
ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜ்பூர் ரஹ்மானை 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் கேகேஆர் அணி வாங்கியது.
IPL 2024 Auction Updates : ஆர்சிபியில் லாக்கி பெர்குசன்
நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனை 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர் பெங்களுரு அணி
IPL 2024 Auction Updates : ரைலி ரூசோவ்வுக்கு ரூ.8 கோடி
தென்னாப்பிரிக்கா வீரர் ரைலி ரூசோவை ஏலத்தில் வாங்க டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் கடுமையாக போட்டி போட்டன. முடிவில் பஞ்சாப் அணி 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
IPL 2024 Auction Updates : கொல்கத்தா அணியில் மணீஷ் பாண்டே
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மணீஷ் பாண்டேவை 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
IPL 2024 Auction Updates : ஏலம்போகாத கருண் நாயர்..!
இந்திய அணிக்காக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் அடித்திருக்கும் கருண் நாயரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.
IPL 2024 Auction Updates : சன்ரைசர்ஸ் வாங்கிய இளம் வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஜாதவேத் சுப்பிரமணியன் ஏலம் எடுத்தது.
IPL 2024 Auction Updates : பஞ்சாப் அணியில் பிரின்ஸ் சௌத்ரி
பஞ்சாப் கிங்ஸ் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு பிரின்ஸ் சவுத்திரியை ஏலம் எடுத்தது
IPL 2024 Auction Updates : விலை போகாத இளம் வீரர்கள்
சாகிப் ஹுசைன், பிபின் சௌரப் மற்றும் கே.எம். ஆசிப், முகமது கைஃப், அபிலாஷ் ஷெட்டி, குர்ஜப்நீத் சிங், பிரித்திவி ராகுல், சுபம் அகர்வால் ஆகியோர் ஏலம் போகவில்லை
IPL 2024 Auction Updates : மும்பை vs சிஎஸ்கே vs குஜராத் vs SRH
இளம் வீரர் ராபின் மினஸை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியிடையே கடும் போட்டி நிலவியது. திடீரென குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளே வர, அவர்களுடன் சன்ரைசர்ஸ் அணியும் ஏலம் எடுக்க முன்வந்தது. கடைசியாக குஜராத் அணி 3.60 கோடிக்கு ராபின் மினஸை ஏலம் எடுத்தது.
IPL 2024 Auction Updates : ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு சோகம்
பஞ்சாப் அணி தாங்கள் வாங்க நினைத்த பிளேயர் என நினைத்து தவறான ஒரு பிளேயரை ஏலம் எடுத்துவிட்டது. ஆனால் அந்த பிளேயர் அவர்கள் லிஸ்டிலேயே இல்லை. ஏலம் முடிந்துவிட்டதால் அந்த இளம் பிளேயருக்கு ஜாக்பாட் அடித்தது.
IPL 2024 Auction Updates : பஞ்சாப் அணியில் தனய் தியாகராஜன்
இளம் வீரர் தனய் தியாகராஜன் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
IPL 2024 Auction Updates : பஞ்சாப் அணி வாங்கிய இளம் வீரர்கள்
பஞ்சாப் அணி சஷாங் சிங், விஸ்வநாத் பிரதாப் சிங் மற்றும் அஷூதோஷ் சர்மா ஆகியோரை அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது
IPL 2024 Auction Updates : டெல்லி ஏலம் எடுத்த சுமித் குமார்
டெல்லி அணி இளம் வீரர் சுமித் குமாரை 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இவரை ஏலம் எடுக்க கொல்கத்தா அணி போட்டி போட்டது.
IPL 2024 Auction Updates : மும்பை வாங்கிய இளம் ஆல்ரவுண்டர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணி இளம் ஆல்-ரவுண்டர்களான, அன்ஷுல் கம்போஜ் மற்றும் நமன் திரை ஆகியோரை அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
IPL 2024 Auction Updates : ஏலம் போகாத Uncapped பேட்ஸ்மேன்கள்
Uncapped பேட்ஸ்மேன்கள் பிரிவில் ஸ்வஸ்திக் சிகாரா, ஹிருத்திக் ஈஸ்வரன் & ஹிம்மத் சிங், சந்தீப் வாரியர் & லூக் வூட் ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை.
IPL 2024 Auction Updates : Uncapped பேட்ஸ்மேன்களுக்கான ஏலம் தொடங்கியது
துபாயில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் Uncapped பேட்ஸ்மேன்களுக்கான ஏலம் தொடங்கியது
IPL 2024 Auction Updates : நுவான் துஷாரா 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம்
இலங்கை பந்துவீச்சாளர் நுவான் துஷாராவை மும்பை இந்தியன்ஸ் அணி 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இவரை ஏலம் எடுக்க ஆர்சிபி அணி கடுமையாக முட்டி மோதியது.
IPL 2024 Auction Updates : ஆர்சிபி vs மும்பை போட்டி
இலங்கை பந்துவீச்சாளர் நுவான் துஷாராவை ஏலம் எடுக்க ஆர்சிபி மற்றும் மும்பை அணிகளிடையே கடும்போட்டி நிலவியது.
IPL 2024 Auction Updates : 5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன ரிச்சர்ட்சன்
வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவரின் அடிப்படை விலையாக 1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
IPL 2024 Auction Updates : 50 லட்சத்தில் இருந்து 10 கோடிக்கு ஏலம் போன வீரர்
ஸ்பென்சர் ஜான்சனின் அடிப்படை விலை 50 லட்சம் தான். ஆனால் அவரை கடும் போட்டிக்குப் பிறகு 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி
IPL 2024 Auction Updates : சிஎஸ்கேவில் முஸ்தாபிசூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி ரூபாய் விலைக்கு வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூரை வாங்கியது
IPL 2024 Auction Updates : ஸ்பென்சர் ஜான்சனுக்கு ரூ.10 கோடி
ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சனை வாங்கிய குஜராத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக 10 கோடி ரூபாய் விலைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.
IPL 2024 Auction Updates : மேட் ஹென்றி ஐபிஎல் கனவு தகர்ந்தது
நியூசிலாந்தைச் சேர்ந்த மாட் ஹென்றி & கைல் ஜேமிசன் ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை
IPL 2024 Auction Updates : தென்னாப்பிரிக்கா வீரருக்கு மவுசு இல்லை
தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கீமோ பால் ஆகியோரை எந்த ஐபிஎல் அணியும் வாங்கவில்லை
IPL 2024 Auction Updates : லக்னோ அணியில் டேவிட் வில்லி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டேவிட் வில்லியை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது
IPL 2024 Auction Updates : ஜிம்மி நீஷம், ஓடியன் ஸ்மித் வாங்கவில்லை
நியூசிலாந்தின் ஜிம்மி நீஷம், பிரேஸ்வெல் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஓடியன் ஸ்மித், ஷாய் ஹோப் ஆகியோரை எந்த ஐபிஎல் அணியும் வாங்கவில்லை
டாம் கரன் ஆர்சிபி அணியில்
IPL 2024 Auction Updates : சாம் கரண் சகோதரர் டாம் கரண் 1.50 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியது.
IPL 2024 Auction Updates : வேகமாக நடைபெறும் ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் ஏலம் வேகமாக நடைபெறுகிறது. 10வது சுற்று ஏலம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
IPL 2024 Auction Updates : குமார் குஷ்க்ராவை டெல்லி அணி வாங்கியது ஏன்?
குமார் குஷ்க்ரா சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். ரிஷப் பன்டுக்கு பேக்அப் பிளேயராக இருக்க வேண்டும் என்பதற்காக இவரை இவ்வளவு விலை கொடுத்து டெல்லி அணி வாங்கியிருக்கிறது.
IPL 2024 Auction Updates : ராஜஸ்தான் பிளேயர் மும்பை அணியில்
ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் கோபால் 20 லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது
IPL 2024 Auction Updates: ஏலம் போகாத தமிழக வீரர்
தமிழக வீரர் முருகன் அஸ்வினை எந்த ஐபிஎல் அணியும் ஏலம் எடுக்கவில்லை.
IPL 2024 Auction Updates : மானவ் சுதார் குஜராத் அணியில்
20 லட்சத்துக்கு மானவ் சுதார் குஜராத்திற்கு விற்கப்பட்டார்.
IPL 2024 Auction Live Updates: குஜராத் அணியில் கார்த்திக் தியாகி
கார்த்திக் தியாகி 60 லட்சத்துக்கு குஜராத்திற்கு விற்கப்பட்டார். கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார்.
IPL 2024 Auction Live Updates: ஆர்சிபியில் யாஷ் தயால்
குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடிய யாஷ் தயால் இந்த முறை ஆர்சிபி அணிக்காக விளையாட இருக்கிறார். அவரை 5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு வாங்கியது
IPL 2024 Auction Live Updates: குமார் குஷ்க்ராவுக்கு ஜாக்பாட்..!
இளம் வீரர் குமார் குஷ்க்ராவை 7.20 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது. கடுமையான போட்டி இருந்தபோதும் விடாமல் குஷ்க்ராவை வாங்கியது டெல்லி.
IPL 2024 Auction Live Updates: சமீர் ரிஸ்வி - ’சின்ன ஆன்ரே ரஸ்ஸல்’
உள்ளுர் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கும் சமீர் ரிஸ்வியின் அதிரடி ஆட்டம் இதோ..
IPL 2024 Auction Live Updates: குஜராத் அணியில் ஷாருக் கான்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக் கானை குஜராத் அணி ரூ.7.4 கோடிக்கு எடுத்துள்ளது, பஞ்சாப் அணி கடைசி வரை போராடியது. ரமன்தீப் சிங்கை ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா அணி வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: அடிப்படை விலையில் வாங்கப்பட்ட அங்கிஷ் ரகுவன்ஷி
இந்திய உள்நாட்டு பேட்டர் அங்கிஷ் ரகுவன்ஷியை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அர்ஷின் குல்கர்னியை ரூ.20 லட்சம் ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது
IPL 2024 Auction Live Updates: சிஎஸ்கேவில் சமீர் ரிஸ்வி
இந்திய உள்நாட்டு வீரர் சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
IPL 2024 Auction Live Updates: சுபம் தூபேவுக்கு ஜாக்பாட்
இந்திய உள்நாட்டு வீரர் சுபம் தூபே 5.80 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராய்ல்ஸ் வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: சுபம் தூபேவுக்கு இனி எல்லாம் சுபமே
இந்திய தேசிய அணிக்கு விளையாடாத, உள்நாட்டு பேட்டர்களின் செட் தற்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்த செட்டில் முதல் வீரரான சுபம் தூபேவுக்கு டெல்லி - ராஜஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது
IPL 2024 Auction Live Updates: டேவிட் வார்னர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று ஏலத்தில் எடுத்துள்ளது. இதுகுறித்து டிராவிஸ் ஹெட் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டிருந்தார்.
அதை மீண்டும் பகிர்ந்துகொள்ள டேவிட் வார்னர் முயன்றபோது, அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளாக் செய்திருப்பது அவருக்கு தெரியவந்தது. X தளத்திலும் அந்த அணி வார்னரை பிளாக் செய்துள்ளது. இதன் புகைப்படங்களை டேவிட் வார்னர் இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
Capped Players செட்டுகளின் முடிவில் அனைத்து அணிகளின் பர்ஸ் நிலவரம் (மதிப்பு ரூபாய்)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 11.60 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 8.15 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 11.75 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 31.85 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 6.95 கோடி
ராஜஸ்தான் ரைடர்ஸ் - 7.10 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 24.95 கோடி
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 6.67 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - 13.15 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 3.60 கோடிIPL 2024 Auction Live Updates: இளம் வீரர்களில் யாருக்கு கோடி ரூபாய்?
தேசிய அணிக்கு விளையாடாத இந்திய வீரர்கள் இந்த ஆறாவது செட்டில் பிரயன்ஷ் ஆர்யா, சவுரவ் சுவாஹான், சுபம் துபே, ரோஹன் குன்னும்மாள், அங்கிரிஷ் ரகுவன்ஷி, சமீர் ரிஸ்வி, மனன் வோஹ்ரா ஆகியோர் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக உள்ளனர்.
IPL 2024 Auction Live Updates: விலை போகாத செட்
Capped Fast Bowlers செட் முடிந்த நிலையில், Capped Spinners செட் நடைபெற்றது. இந்த செட்டில் வகார் சலாம்கீல் (ரூ.50 லட்சம்), ஆதில் ரஷீத் (ரூ.2 கோடி), அகீல் ஹொசேன் (ரூ.50 லட்சம்), ஈஷ் சோதி (ரூ.75 லட்சம்), தப்ரைஸ் ஷம்சி (ரூ. 50 லட்சம்), முஜிப் உர் ரஹ்மான் (ரூ. 2 கோடி) ஆகியோர் ஏலம்போகவில்லை. அதாவது, இந்த செட்டில் யாரையுமே எந்த அணியும் எடுக்கவில்லை.
IPL 2024 Auction Live Updates: மும்பையில் தில்ஷன் மதுஷங்கா
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவை ரூ.4.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் தூக்கியது. முன்னதாக, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் ரூ.1.60 கோடிக்கு ஹைதராபாத் அணி எடுத்தது.
IPL 2024 Auction Live Updates: ஹேசில்வுட் Unsold
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹசில்வுட்டை எந்த அணியும் வாங்கவில்லை.
IPL 2024 Auction Live Updates: கேப்டனையே முந்திய ஸ்டார்க்
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்கை (Mitchell Starc) ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கி உள்ளது. இவர்தான் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையை பெற்றார்.
IPL 2024 Auction Live Updates: எகிறும் மிட்செல் ஸ்டார்க்கின் விலை
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ஆரம்பத்தில் இருந்து 9.80 கோடி வரை மும்பை - டெல்லி அணிகள் ஏலம் கேட்டது. அதன்பின்னர், டெல்லியும், மும்பையும் அங்கிருந்து ஏலத்தை கைவிட கொல்கத்தாவும், குஜராத்தும் அங்கிருந்து ஏலத்தை கேட்டன. ரூ. 15 கோடியை தாண்டி அவரின் ஏலம் சென்றுகொண்டிருக்கிறது.
IPL 2024 Auction Live Updates: சிவம் மாவியை பெற்றது லக்னோ
இந்திய வேகப்பந்துவீச்சாளர் சிவம் மாவியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6.40 கோடிக்கு வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: உமேஷ் யாதவை வாங்கியது குஜராத்
இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.5.80 கோடிக்கு வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: முதல் வீரரை வாங்கியது ஆர்சிபி
மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பிற்கு சென்னை, டெல்லி, லக்னோ, பெங்களூரு அணிக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெங்களூரு அணி ரூ.11.50 கோடிக்கு பெங்களூரு வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: வேகப்பந்துவீச்சு செட் தொடக்கம்
Capped Fast Bowler என்ற நான்காவது செட்டில் லாக்கி பெர்குசன் ஏலம் போகவில்லை. இந்திய வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியாவை ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: முடிந்தது மூன்றாவது செட்
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஸ்டப்ஸை அடிப்படை தொகை ரூ.50 லட்சத்திற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. கே.எஸ். பரத்தையும் ரூ.50 லட்சத்திற்கு கொல்கத்தா அணி வாங்கியது. இந்த செட்டில் பில் சால்ட், ஜோஷ் இங்லிஸ், குசால் மெண்டிஸ் ஆகியோர் ஏலம் போகவில்லை. இந்த மூன்றாவது செட் முடிந்தது.
IPL 2024 Auction Live Updates: வைரலாகும் பழைய வீடியோ
ஷர்துல் தாக்கூர் கொல்கத்தா ஜெர்ஸிக்கு மேல் சிஎஸ்கே ஜெர்ஸி அணியும் பழைய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் X பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
IPL 2024 Auction Live Updates: கணக்கை தொடங்காத ஆர்சிபி
இரண்டு செட்டுகள் நிறைவடைந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட்ஸ் உள்ளிட்டோர் இன்னும் ஒரு வீரர்களையும் வாங்கவில்லை,.
IPL 2024 Auction Live Updates: மூன்றாவது செட்டில் யார் யார்?
Capped All-Rounder என்ற 2ஆவது செட் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது செட் ஏலம் தொடங்க உள்ளது. Capped Wicket Keeper செட்டில் கே.எஸ்.பரத், ஜோஷ் இங்லிஸ், குசால் மெண்டிஸ், பில் சால்ட், டிஸ்டர்ன் ஸ்டப்ஸ் உள்ளனர்.
IPL 2024 Auction Live Updates: கிறிஸ் வோக்ஸ் - பஞ்சாப்
இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸை பஞ்சாப் அணி 4.20 கோடிக்கு வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: சிஎஸ்கேவில் டேரில் மிட்செல்
நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லை வாங்க கடும் போட்டி நிலவியது. அதாவது, டெல்லி, பஞ்சாப் அணி தொடக்கத்தில் ஏலம் போனது. ரூ.11.75 கோடி வந்தபோது, டெல்லி விலகியது. அங்கிருந்து சென்னை ஏலம் கேட்டது. தொடர்ந்து, டேரில் மிட்செல்லை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: ஹைதராபாத் கேப்டன் ஆகும் பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்திருந்தது. அந்த அணி தனது கேப்டனை இதுவரை உறுதி செய்யாத நிலையில் வரும் சீசனில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் எனலாம். கடந்த சீசனில் எய்டன் மார்க்ரம் கேப்டனாக இருந்தார்.
IPL 2024 Auction Live Updates: ஹர்ஷல் படேலை தூக்கியது பஞ்சாப்
இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. அடுத்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை வாங்க பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
IPL 2024 Auction Live Updates: கோட்ஸிக்கு ரூ. 5 கோடி - பலம் பெறும் மும்பை!
தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸியை ரூ.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம், அவர்களின் ஆல்-ரவுண்டர் வரிசை பலப்பட்டுள்ளது.
IPL 2024 Auction Live Updates: சாம் கரணை முந்திய பாட் கம்மின்ஸ்
கடந்த ஆண்டு சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஏலம் போனதே ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு வீரர் ஏலம் போன தொகையாக இருந்தது. அதனை பேட் கம்மின்ஸ் முறியடித்துள்ளார். அவரை தற்போது ஹைதராபாத் அணி ரூ.20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
IPL 2024 Auction Live Updates: புது வரலாறு படைத்த பாட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.
IPL 2024 Auction Live Updates: பாட் கம்மின்ஸ் - மும்பை vs சென்னை
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பாட் கம்மின்ஸை ஏலத்தில் வாங்க மும்பை, சென்னை கடும் போட்டி போட்டது. ரூ.4.80 கோடிக்கு பின் மும்பை கைவிட்ட பின், பெங்களூரு அவரை ஏலம் கேட்க தொடங்கியது. இவர்களுக்கு இடையேவும் கடும் போட்டி நிலவுகிறது.
IPL 2024 Auction Live Updates: லார்டு தாக்கூர் ரிட்டர்ன்ஸ்
இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4 கோடிக்கு வாங்கியது. தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாயை அவரின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கே குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: சிஎஸ்கேவில் ரச்சின் ரவீந்திரா
நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1.80 கோடிக்கு வாங்கியது
IPL 2024 Auction Live Updates: ஹசரங்கா - ஹைதராபாத்
இலங்கை ஆல்-ரவுண்டர் ஹசரங்காவை அடிப்படை தொகை ரூ.1.50 கோடிக்கே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்தது.
IPL 2024 Auction Live Updates: 2ஆவது செட்டில் யார் யார்?
Capped All-Rounders செட் அடுத்தாக ஏலத்திற்கு வருகிறது. ரச்சின் ரவீந்திரா, ஜெரால்டு கோட்ஸி, பாட் கம்மின்ஸ், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் அதில் உள்ளனர்.
IPL 2024 Auction Live Updates: முடிந்தது முதல் செட்
Capped Batters முதல் செட் ஏலம் முடிந்தது. இதில் இந்திய வீரர்கள் மனீஷ் பாண்டே, கருண் நாயர் ஆகியோர் ஏலம் போகவில்லை. அதிகபட்சமாக ரோவ்மேன் பாவெலை ரூ.7.40 கோடிக்கு ஆர்ஆர் வாங்கியது. டிராவிஸ் ஹெட் ஹைதராபாத்தை ரூ.6.80 கோடிக்கு வாங்கியது.
IPL 2024 Auction Live Updates: கருண் நாயர், ஸ்டீவ் ஸ்மித், மனீஷ் பாண்டே Unsold
இந்திய வீரர் கருண் நாயரை (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை. மேலும், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தையும் (அடிப்படை விலை ரூ.2 கோடி) எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை. மேலும் மனீஷ் பாண்டேவும் (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) யாராலும் வாங்கப்படவில்லை.
IPL 2024 Auction Live Updates: டிராவிஸ் ஹெட் - ஹைதராபாத்
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.6.80 கோடிக்கு வாங்கியது
IPL 2024 Auction Live Updates: டிராவிஸ் ஹெட்டுக்கு கடும் போட்டி
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடர்ந்து ஏலம் கேட்டு வருகிறது.
IPL 2024 Auction Live Updates: ஹாரி ப்ரூக் - ரூ. 4 கோடி
இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ரூ. 4 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது
IPL 2024 Auction Live Updates: ஏலம் போகாத தென்னாப்பிரிக்க வீரர்
தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசோவ் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை
LIVE | IPL 2024 Auction Updates : ரோவ்மேன் பாவெல் - ரூ.7.40 கோடி
Capped Batters செட்டில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ரோவ்மேன் பாவெலை ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது.
LIVE | IPL 2024 Auction Updates: முதல் வீரர் - ரோவ்மேன் பாவெல்
Capped Batters முதல் செட்டில் மேற்கு இந்திய வீரர் ரோவ்மேன் பாவெல் முதல் வீரராக ஏலம் விடப்பட்டார். கொல்கத்தா, ராஜஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது
LIVE | IPL 2024 Auction Updates: முதல் பெண் ஏலதாரர்
துபாய் கோகோ கோலா அரங்கத்தில் நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் பெண் ஏலதாரராக மல்லிகா சாகர் செயல்படுகிறார்.
IPL 2024 Auction Live Updates: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - முழு விவரம்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர் (டிரேடிங்), வைஷாக் விஜய்குமார், ஆகாஷ் தீப், ஆகாஷ் தீப், சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார்
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்
நிரப்பப்பட வேண்டிய இடங்கள்: 11
கையிருப்பு தொகை: ரூ.23.25 கோடி
IPL 2024 Auction Live Updates: பஞ்சாப் கிங்ஸ் - முழு விவரம்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் கர்ரன் ககிசோ ரபாடா ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் பிரார். , ஹர்ப்ரீத் பதி, வித்வத் கவேரப்பா, சிவம் சிங்
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மோஹித் ரதீ, ராஜ் பாவா, ஷாருக் கான், பானுகா ராஜபக்சே, பால்தேஜ் சிங்
நிரப்பப்பட வேண்டிய இடங்கள்: 5
கையிருப்பு தொகை: ரூ.29.1 கோடி
IPL 2024 Auction Live Updates: ராஜஸ்தான் ராயல்ஸ் - முழு விவரம்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் , ஆடம் ஜம்பா, அவேஷ் கான் (லக்னோ அணியில் இருந்து டிரேட் ஆனவர்)
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி. கரியப்பா, கே.எம்.ஆசிப்.
நிரப்பப்பட வேண்டிய இடங்கள்: 9
கையிருப்பு தொகை: ரூ.14.5 கோடி
IPL 2024 Auction Live Updates: டெல்லி கேப்பிடல்ஸ் - முழு விவரம்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் ஷர்மா, முகேஷ் குமார், யகேஷ் குமார்.
வெளியிடப்பட்ட வீரர்கள்: ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மனிஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோடி, ரிபால் படேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.
நிரப்பப்பட வேண்டிய இடங்கள்: 11
கையிருப்பு தொகை: ரூ.28.95 கோடி
Highest Paid Players in IPL
IPL Auction: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்?
IPL 2024 Auction Live Updates: ஏலத்தில் மொத்த வீரர்கள் எத்தனை?
மொத்தம் 333 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். அதில் 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் அடக்கம். வெளிநாட்டு வீரர்களில் இருவர் டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணியை சேர்ந்தவர்கள்.
IPL 2024 Auction Live Updates: எத்தனை வீரர்கள் தேவை?
இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 77 பேர் ஒட்டுமொத்தமாக 10 அணிகளுக்கு தேவைப்படுகிறது.
IPL 2024 Auction Live Updates: ஐபிஎல் ஏலம் எப்போது தொடங்கும்?
ஐபிஎல் ஏலம் இன்று இந்திய நேரப்படி மதியம் 1 மணியளவில் தொடங்கும்.
IPL 2024 Auction Live Updates: எப்போது, எங்கு பார்ப்பது?
ஐபிஎல் மினி ஏலம் துபாய் கோகோ கோலா அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது. முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இதனை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) சேனலிலும், ஓடிடியில் ஜியோ சினிமா (JioCinema) தளத்திலும் இலவசமாக காணலாம்.