ஐபிஎல்லில் முதல்முறையாக விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு இந்த சீசன் இதுவரை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றையும் ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. இருப்பினும் கடைசி 2 போட்டிகளில் அந்த அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறந்த ஆல்ரவுண்டராக இருப்பார் என நினைத்து அந்த அணி போட்டி போட்டு எடுத்த மார்கஸ் ஸ்டொயினஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் மெகா ஏலம்


பிப்ரவரியில் பிரம்மாண்டமாக ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் புதியதாக களமிறங்கிய 2 அணிகள் உட்பட அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான மற்றும் விரும்பும் வீரர்களை போட்டி போட்டு எடுத்தனர். ஆனால், ஏலத்திற்கு முன்பே லக்னோ அணி, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொயினஸ் மீது அதீத நம்பிக்கை வைத்தது. இதனால், 9.2 கோடி கொடுத்து லக்னோ அணிக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், இந்த முடிவு லக்னோ அணிக்கு பாதகமாக அமைந்துள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அவர் களமிறங்கிய ஆட்டங்களில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். 



மேலும் படிக்க | வந்துவிட்டது பெண்களுக்கான ஐபிஎல் போட்டிகள்! அணி விவரம்!


தடுமாறும் ஸ்டொயினஸ்


மார்கஸ் ஸ்டோயினிஸ் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில் அவர் 21.00 சராசரியில் 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் அவரது சிறந்த ஸ்கோர் 38 நாட் அவுட் ஆகும். பந்துவீச்சில் கூட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அவர் பெரிய பங்களிப்பை கொடுக்கவில்லை. 9 போட்டிகளில் 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.



ஃபார்முக்கு வருவாரா?


ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டொயினிஸ் தனது அனல் பறக்கும் பேட்டிங்கிற்கும் பெயர் பெற்றவர். ஆனால் அவரது ஆட்டம் இந்த சீசனில் சொல்லுமளவுக்கு இல்லை. இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. கடந்த சீசனிலும் ஸ்டோனிஸ் அரைசதம் அடிக்கவில்லை. இனி வரும் போட்டிகளிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என லக்னோ அணி நம்பிக்கையில் உள்ளது. 


மேலும் படிக்க | ராயுடுவின் ட்வீட்டுக்கு காரணம் என்ன?... ப்ளெமிங் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR