வந்துவிட்டது பெண்களுக்கான ஐபிஎல் போட்டிகள்! அணி விவரம்!

மே 23 முதல் 28 வரை புனேவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 போட்டிக்கான அணிகளை பிசிசிஐ அறிவித்தது.  

Written by - RK Spark | Last Updated : May 16, 2022, 03:01 PM IST
  • மே 23 முதல் மகளிர் டி20 போட்டிகள்.
  • மொத்தம் 3 அணிகள் பங்கேற்கின்றன.
  • முழு வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.
வந்துவிட்டது பெண்களுக்கான ஐபிஎல் போட்டிகள்! அணி விவரம்! title=

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று பெண்கள் டி20 சேலன்ஜ் அணிகளை அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் முறையே சூப்பர்நோவாஸ், டிரெயில்பிளேசர்ஸ் மற்றும் வெலோசிட்டியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் மே 23 முதல் 28 வரை நடைபெறவுள்ள மகளிர் டி20 போட்டியில் மூன்று அணிகளும் மோதுகின்றன.

மேலும் படிக்க | நான்காவது அணியாக பிளே ஆப்பிற்கு நுழைய போவது யார்?

"இந்த இந்திய மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் ஐபிஎல் போட்டிகளை போலவே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து விளையாட உள்ளனர். இந்த ஆண்டு மகளிர் டி20 சேலன்ஜில் மொத்தம் 12 சர்வதேச வீரர்கள் பங்கேற்பார்கள்" என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  அகில இந்திய பெண்கள் தேர்வுக் குழு மூன்று அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது, ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 

womenst20

மகளிர் டி20 சேலன்ஜ் தொடக்க ஆட்டம் டிரெயில்பிளேசர்ஸ் மற்றும் சூப்பர்நோவாஸ் அணிகளுக்கு இடையே மே 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.  மே 24 அன்று, சூப்பர்நோவாஸ் வெலோசிட்டிக்கு எதிராகவும், மே 26 அன்று வேலாசிட்டி டிரெயில்பிளேசர்ஸை எதிர்கொள்கிறது. இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அணி விவரம்:

சூப்பர்நோவாஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (C), தனியா பாட்டியா, அலனா கிங், ஆயுஷி சோனி, சந்து வி, டியான்ட்ரா டாட்டின், ஹர்லீன் தியோல், மேக்னா சிங், மோனிகா பட்டேல், முஸ்கன் மாலிக், பூஜா வஸ்த்ரகர், பிரியா புனியா, ராஷி கனோஜியா, சோஃபி எக்லெஸ்டோன், சுனே லூஸ், மான்சி ஜோஷி

டிரெயில்பிளேசர்ஸ்: ஸ்மிருதி மந்தனா (C), பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, ஹெய்லி மேத்யூஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரியங்கா பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எஸ் மேகனா, சைகா இஷாக், சல்மா கதுன், சுப்ரியா மால், ஷர்மின் அக்டர் எஸ்.பி போகர்கர்.

வேலாசிட்டி: தீப்தி ஷர்மா (c), ஸ்னேஹ் ராணா, ஷஃபாலி வர்மா, அயபோங்கா காக்கா, கேபி நவ்கிரே, கேத்ரின் கிராஸ், கீர்த்தி ஜேம்ஸ், லாரா வால்வார்ட், மாயா சோனாவனே, நத்தகன் சந்தம், ராதா யாதவ், ஆர்த்தி கேதார், ஷிவாலி பஹாத்யா, யஸ்திகா ஷிண்டே பிரணவி சந்திரா

மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே-வின் மோசமான சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News