மாட்ரிட் ஓபன் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதியான வீராங்கனைகளை பேச அனுமதி மறுத்ததற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்கள் இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்கா மற்றும் பீட்ரிஸ் ஹடாட் மியா ஆகியோர் ஜெசிகா பெகுலா மற்றும் கோகோ காஃப் ஆகியோரை வென்றனர், ஆனால் அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியாளர்கள் தங்கள் போட்டிகளுக்குப் பிறகு பேச அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி அமைப்பாளர்கள், மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியாளர்களை கடந்த வாரம் போட்டியின் பின்னர் பேச அனுமதிக்காததற்கு மன்னிப்புக் கேட்டனர்.


ஞாயிற்றுக்கிழமை (2023, மே 6) நடைபெற்ற பெண்கள் இறுதிப் போட்டியில், விக்டோரியா அசரென்கா மற்றும் பீட்ரிஸ் ஹடாட் மியா ஆகியோர் ஜெசிகா பெகுலா மற்றும் கோகோ காஃப் ஆகியோரை வென்றனர், ஆனால் கூட்டத்தில் உரையாற்ற அனுமதிக்க அவர்களுக்கு மைக்ரோஃபோன் வழங்கப்படவில்லை.


மேலும் படிக்க | IPL 2023: தீபக் சஹாரின் தலையிலேயே போட்ட தல... தோனியின் என்ட்ரியால் எச்சரித்த ஆப்பிள் வாட்ச் - சுவாரஸ்ய சம்பவங்கள்!


"முதுவா மாட்ரிட் ஓபன் போட்டியை அதிகம் எதிர்பார்க்கும் அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று மாட்ரிட் ஓபன் தலைமை நிர்வாக அதிகாரி ஜெரார்ட் சோபானியன் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



"எங்கள் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியாளர்களுக்கு போட்டியின் முடிவில் அவர்களின் ரசிகர்களிடம் பேசும் வாய்ப்பை வழங்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது, நாங்கள் விக்டோரியா, பீட்ரிஸ், கோகோ மற்றும் ஜெசிகாவிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டுள்ளோம்."


எதிர்காலத்தில் தங்கள் செயல்முறையை மேம்படுத்த டபிள்யூடிஏவுடன் இணைந்து போட்டிகள் செயல்படுவதாக மாட்ரிட் ஓபன் தலைமை நிர்வாக அதிகாரி ஜெரார்ட் சோபானியன் கூறினார். "நாங்கள் தவறு செய்தோம், இது மீண்டும் நடக்காது," என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | KKR vs RR: கொல்கத்தாவை பந்தாடிய ஜெய்ஸ்வால்! ராஜஸ்தான் தெறி வெற்றி!


செவ்வாயன்று ரோமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வீராங்கனை பெகுலா, இந்த போட்டியில் பெண்கள் பேச அனுமதிக்கப்படாததை விமர்சித்தார். "எங்களால் பேச முடியாதா? இல்லை. என் வாழ்நாளில் இவ்வாறு நடத்தப்பட்டதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை," என்று அவர் போட்டியில் பெண்கள் மட்டும் பேச அனுமதிக்கப்படாததைப் பற்றி தெரிவித்தார். 


"அந்த முடிவை எடுத்தவர்கள், எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்று பெகுலா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


பெகுலாவைப் போலவே, இறுதிப் போட்டியில் விளையாடிய மூன்று டென்னிஸ் வீராங்கனைகளும், பேச அனுமதிக்கப்படாத விஷயத்தில் அதிருப்தியடைந்தனர்.



பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியாளர் இகா ஸ்வியாடெக் சனிக்கிழமையன்று தனது உரையில் போட்டியின் தாமதமான முடிவுகளைப் பற்றி விமர்சித்தார், நள்ளிரவு 1 மணிக்கு (2300GMT) விளையாடுவது "வேடிக்கையாக இருக்கிறது" என்று கூறினார்.


வெற்றியாளர் அரினா சபலெங்கா தனது உரையில் முந்தைய நாள் தனக்கு வழங்கப்பட்ட பிறந்தநாள் கேக்கைப் பற்றி கேலி செய்தார், இது போட்டி ஆண்கள் சாம்பியன் கார்லோஸ் அல்கராஸுக்கு வழங்கியதை விட சிறியது என்பதை சுட்டிக்காட்டினார்.


மாட்ரிட் ஓபன் பால் கேர்ள் ஆடைகள் பற்றிய புகார்களை எதிர்கொள்கிறது, சில ரசிகர்கள் "பாலியல் சார்ந்தவை" என்று விமர்சித்துள்ளனர்.


மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு போட்டி போடும் 10 அணிகள்! யாருக்கு தான் வாய்ப்பு அதிகம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ