இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி தற்போது விலகி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.


 



 


இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார். 


இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகினார். அவரை தொடர்ந்து கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். 


இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். 


இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஒருவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிக்கான தேர்வில் டோனி இடம்பெறுவார்.


வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அதன் பிறகு மூன்று டி-20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.


இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக்குழு நாளை கூடும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு டோனி தலைமையில் இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் டோனி யின் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.