உலக கோப்பை துப்பாக்கி சுடதல் களப்பு பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ISSF உலக கோப்பை 2019 தொடர் புதுடெல்லியில், கடந்த வியாழன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.  சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் டெல்லியில் நடைபெற்ற இத்தொடரின் களப்பு பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபில் போட்டி இன்று நடைப்பெற்றது. 


இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. சீனாவின் ரோன்சின் ஜியாங் மற்றும் போவன் ஜாங் ஆகியோர் வெள்ளி பதக்கத்தையும், கொரியாவின் மின்குங் கிம் மற்றும் தஹுன் பார்க் வெண்கலம் வென்றனர்.


மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் மொத்தம் 483.4 புள்ளிகளுடன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்த ஜோடி முந்தைய உலக சாதனையை சமன் செய்ததுடன், 778 புள்ளிகள் கொண்ட ஒரு புதிய தகுதி உலக சாதனையும் படைத்துள்ளது.


மற்றொரு இந்திய ஜோடி ஹீனா சித்து மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் இறுதிப் போட்டியில் மொத்தம் 770 புள்ளிகள் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறினர்.