கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோயினிஸுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான மெல்போர்ன் ஸ்டார்ஸின் பிக் பாஷ் லீக் (BBL) மோதலின் போது தனிப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் தாக்கம் தொடர்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோயினிஸுக்கு 7500 டாலர் (தோராயமாக ரூ. 4 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


சனிக்கிழமை இரவு நடைப்பெற்ற BBL மோதலில் மெல்போர்ன் ஸ்டார்ஸின் எட்டு விக்கெட் வித்தியாச வெற்றியின் போது, 30 வயதான மார்கஸ் ஸ்டோயினிஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஒருவருக்கொருவர் தாகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தனர்.


இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன, மோதலைத் தொடர்ந்து, ஸ்டோனிஸ் குற்றச்சாட்டுக்கு ஒப்புக் கொண்டார் மற்றும் அவரது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டார். இதன் விளைவாக, இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு முறையான விசாரணையும் எடுக்கப்படவில்லை.


என்றபோதிலும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் செய்த தவறை உணர்ந்ததாகவும், உடனடியாக தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதாற்காகவும் அபராதம் மட்டும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது, டி மெரிட் புள்ளிகள் அளிக்கப்படவில்லை.


இதுகுறித்து அவர் கூறுகையில்., "நான் இப்போதே சிக்கிக் கொண்டேன், நான் தவறு செய்ததை உடனடியாக உணர்ந்தேன், நான் கேனிடமும் நடுவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் தவறு செய்தேன், எனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். நான் தண்டனையையும் ஏற்றுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.


மார்கஸ் ஸ்டோயினிஸின் வருத்தத்தினை களத்தில் நடுவர்களான ஜெரார்ட் அபுத் மற்றும் பிலிப் கில்லெஸ்பி ஆகியோர் தெரியபடுத்தியுள்ளனர்.


இதனிடையே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அடுத்த போட்டி ஜனவரி 8-ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.