பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ‌ஷரபோவா. ரஷியாவை சேர்ந்த இவர் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கினார். தடை செய்யப்பட்ட மெல்டோனியம் ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் அவருக்கு 2 ஆண்டு தடையை சர்வதேச டென்னிஸ் சங்கம் விதித்தது. தனக்கு குறைந்த தண்டனை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். இந்த தடையால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தான் தெரியாமல் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறி ‌ஷரபோவா 2 ஆண்டு தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். அவரது மனுவை விசாரித்த வந்த விளையாட்டு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியது.


அப்போது ‘‘ஷரபோவா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளது விதிமுறையை மீறிய செயலாகும். இது மிகவும் அபாயகரமான தவறு அல்ல. சிறிய அளவிலான தவறு என்பதால் அவரது தடைக்காலம் 15 மாதங்களாக குறைக்கப்படுகிறது. இந்த தடைக்காலம் ஜனவரி 26-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது’’ என்று தீர்ப்பு வழங்கியது.


இதனால் ஷரபோவாவின் தடைக்காலம் அடுத்த வருடம் ஏப்ரல் 26-ந்தேதியுடன் முடிவடையும். அதன்பின் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம்.


இதுகுறித்து ஷரபோவா கூறுகையில்:-மீண்டும் போட்டிக்கு திரும்பவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.