அடுத்த ஆண்டு முழுவதும் இந்திய அணி விளையாட உள்ள போட்டி விவரங்கள்!
இந்திய அணி அடுத்த ஆண்டு முழுவதும் ஓய்வே இல்லாமல் விளையாட உள்ளது
2021 உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. தற்போது இந்திய வந்துள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் முடிந்த பிறகு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் இந்திய அணி சவுத் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
அதன் பின், பிப்ரவரியில் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டிகள் முடிந்த பிறகு ஸ்ரீலங்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி20களில் இந்தியாவில் விளையாட உள்ளது. அதன்பின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த வருடம் மொத்தம் 10 அணிகள் ஐபிஎல்-ல் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ஜூன் மாதம் சவுத் ஆப்ரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 5 டி20 போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளது. அதன் பின் ஜுலை மாதம் இந்தியா இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும் இந்த வருடம் நடக்காமல் போன கடைசி டெஸ்ட் போட்டியும் அங்கு நடைபெற உள்ளது. இதன் பின்பு 2022 உலக கோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
ALSO READ ரோஹித் சர்மா தலைமையில் இளம் இந்திய அணி! நியூஸிலாந்தை பழி தீர்க்குமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR