IPL 2019 தொடரின் 22-வது லீக் ஆட்டம் இன்று மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரவிசந்திர அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதிராபாத் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. புள்ளி பட்டியலை பொருத்தவரை இரண்டு அணிகளும் ஆறு புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெறும்.


இரண்டு அணிகளும் வலுவான பேட்டிங் வரிசை இல்லாமல் கடந்த போட்டிகளில் தத்தளித்து வருகின்றன. எனவே இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்து இலக்கை எட்டும் அளவிற்கு இரண்டு அணிகளும் தயார் படுத்தப்படவில்லை. 


இன்றைய பஞ்சாப் அணியிலும் ஐந்து பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளளனர். சாம் கர்ரான் அணியில் இடம்பிடிப்பார் என தெரிகிறது. முஜ்ஜீப் உர் ரஹூமானுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. வருண் சக்ரவர்த்தி பூரண குனத்துடன் அணிக்கு திரும்பியுள்ளார், எனினும் முருகன் அஷ்வினின் இடத்தை அவர் கைப்பற்றமாட்டார் என தெரிகிறது.


ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இருப்பு கேள்விகுறியாகவே உள்ளது, எனவும் டாம் மூடி அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.