விராட் கோலியின் விரக்தி - மைக் ஹெசன் விளக்கம்
ஐபிஎல் 2022ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சில தோல்விகளை சந்தித்தாலும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு விஷயம் மட்டுமே குறையாக இருக்கிறது. அது விராட் கோலியின் ஃபார்ம்.
ஐபிஎல் 2022ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சில தோல்விகளை சந்தித்தாலும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு விஷயம் மட்டுமே குறையாக இருக்கிறது. அது விராட் கோலியின் ஃபார்ம்.
900 ரன்களுக்கும் மேல் ஐபிஎல்லில் அடித்த ஒருவர் இந்த சீசனில் கடுமையான ஃபார்ம் அவுட்டில் இருப்பதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக மூன்று முறை கோலி டக் அவுட் ஆனது பெரும் இடியாகவே இருந்தது.
இந்தச் சூழலில் நேற்று பஞ்சாப் அணியை பெங்களூரு அணி எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 209 ரன்களை குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அனிக்கு கோலியும், பிளசிஸும் தொடக்கம் தந்தனர்.
விராட் கோலி பாசிட்டிவாகவே நேற்று தனது இன்னிங்ஸை தொடங்கினார். இதனால் பழைய கோலியை பார்க்கலாம் என ரசிகர்கள் உற்சாகத்திற்கு சென்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக 20 ரன்களுக்கு அவர் நான்காவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி விராட் கோலியும் விரக்தியடைந்தார். அவுட்டாகி அவர் செல்லும்போது கைகளை உயர்த்தி வானத்தை நோக்கி பார்த்து எதையோ சொல்லிவிட்டு சென்றார்.
மேலும் படிக்க | ஓய்வு பெறுவதாக அறிவித்து திரும்ப பெற்ற சிஎஸ்கே வீரர்!
இந்நிலையில் பெங்களூரு அணியின் இயக்குநர் மை ஹெசன் போட்டிக்குப் பின் விராட் கோலி குறித்து பேசுகையில், "இந்தப் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி நல்ல நிலையில் இருந்தார். அவர் ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக இருந்தார். அதற்காக அவர் நன்றாகத் தயாராகி இருந்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வலைப்பயிற்சியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
இன்று (நேற்று) விராட் கோலியின் நாளாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் ஒருமுறை இப்படி ஆகிவிட்டது. இதனால் மற்றவர்களைப்போல் விராட் கோலியும் விரக்தியடைந்தார். ஆர்சிபியைப் பொறுத்தவரையில் அவர்தான் சிறந்த வீரர்.
மேலும் படிக்க | பஞ்சாப்பின் அதிரடியில் பஞ்சாய் பறந்த ஆர்.சி.பி!
விராட் கோலி ஒரு அபாரமான வீரர் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமுமில்லை. அவர் நினைத்த அளவு ரன்களை எடுக்கவில்லை. இன்று அவர் மிகவும் பாசிட்டிவ் மைண்ட் செட்டில் இருந்தார். எனினும் துரதிர்ஷ்டவசமாக நடந்துவிட்டது.
ஏதோ ஒரு சிறப்பான விஷயத்தை பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன். விரைவில் அவுட்டானாலும், சீக்கிரமாக நல்ல பார்மிற்கு அவர் திரும்புவார். அவர் விரக்தியில் இருந்தாலும், சிறப்பான பேட்டிங்கிற்கான திறமை அவரிடம் இருக்கிறது” என்றார். இந்த சீசனில் இதுவரை விராட் கோலி 236 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR