IPL2022: ஐ.பி.எல்லுக்கு மீண்டும் வரும் ஆஸ்திரேலிய புயல்
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு புயலாக இருக்கும் மிட்சல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருக்கும் மிட்சல் ஸ்டார்க் இதுவரை இரண்டு ஐ.பி.எல் சீசன்களில் (IPL 2022) மட்டுமே விளையாடியுள்ளார். 2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு, எந்தவொரு ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக உலகின் தலைச்சிறந்த 20 ஓவர் பந்துவீச்சாளராக இருந்தபோதும் ஐ.பி.எல் விளையாடுவதில் அவருக்கு ஆர்வம் இல்லை.
ALSO READ | IPL 2022: கொரோனாவும் ஐபிஎல்லும்! பிசிசிஐயின் PLAN B
இது குறித்து அவரிடம் ஒருமுறை கேட்டபோது, பிக்பாஷ் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்க உள்ளதாகவும், வொர்க் லோட் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதைக் கருத்தில் கொண்டு ஐ.பி.எல் விளையாடவில்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் விளையாட முடிவெடுத்திருப்பதாக மிட்சல் ஸ்டார்க் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் 20 ஓவர் உலகக்கோப்பை வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை,எடுத்துருப்பதாகவும், ஐ.பி.எல் ஏலத்தில் முறையாக பங்கேற்பதற்காக, தன்னுடைய பெயரை பதிவு செய்ய இருப்பதாகவும் மிட்சல் ஸ்டார்க் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் 20 ஓவர் லீக்கில் ஹோபர்ட் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரூ அணிக்காக 2 சீசன்களில் விளையாடிய ஸ்டார்க், 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பவுலிங் எகானமி 7.16 வைத்துள்ளார்.
ALSO READ | ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் வெங்கடேச ஐயர் சிறந்த தேர்வா?
ஐ.பி.எல் தொடரில் புதிதாக 2 அணிகள் களமிறங்கியிருப்பதால், இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்கும் மிட்சல் ஸ்டார்க்கிற்கு டிமாண்ட் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள வீரராக அவர் இருப்பார் என்றும் கருதப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR