இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2-வது டெஸ்டில் இந்தியா அணியும் வெற்றி பெற்றதுள்ளது. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார். 


கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட தால் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விளையாட மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் அவருடைய விலகல் ஆஸ்திரேலியா அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் ஆவார். 3-வது போட்டி வரும் 16-ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது.  


முதல் டெஸ்டில் ஒரே ஓவரில் புஜாரா மற்றும் விராட் கோலியை வீழ்த்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதேபோல 2வது டெஸ்டில் ஒரே ஓவரில் ரகானே மற்றும் கருண் நாயர் ஆகியோரை வீழ்த்தினார்.