ஐபிஎல் 2024 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தற்போது வரை 36 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் பல புதிய சாதனைகள் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பல வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா வீரர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை போன வீரர்களாக மாறினர். நியூஸிலாந்து வீரர் டேரி மிட்சல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இப்படி அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்தும் சரியான பேட்டிங் அல்லது பவுலிங் செய்யாத 10 வீரர்களை பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிட்செல் ஸ்டார்க் - ரூ 24.75 கோடி


ஐபிஎல்லின் மிகவும் விலையுயர்ந்த வீரர் என்ற பெருமையை பெற்றார் மிட்செல் ஸ்டார்க். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இருப்பினும், அவர் 6 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.  மேலும் அனைத்து போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கியுள்ளார்.


மேலும் படிக்க | IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த 'பலசாலி' பேட்டர் யார் தெரியுமா?


பாட் கம்மின்ஸ் - 20.50 கோடி


ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக விலையுள்ள வீரர் பேட் கம்மின்ஸ். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மேலும் இந்த ஆண்டு கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கம்மின்ஸ் கேப்டன்சியில் தன்னை நிரூபித்தாலும், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை இதுவரை எடுத்துள்ளார்.


டேரில் மிட்செல் - ரூ. 14 கோடி


2024 ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. மிட்செல் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளார், ஆனால் ஒருமுறை மட்டுமே 30 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.  


ஹர்ஷல் படேல் - ரூ 11.75 கோடி


ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து. இந்த சீசனில் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.


அல்ஜாரி ஜோசப் - ரூ 11.50 கோடி


மேற்கிந்திய வீரர் அல்சாரி ஜோசப் ஐபிஎல் 2024 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ. 11.50 கோடிக்கு எடுக்கப்பட்டார். இந்த சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.


ஸ்பென்சர் ஜான்சன் - ரூ 10 கோடி


ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சனை ரூ 10 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.  இந்த ஆண்டு தனது முதல் ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ஸ்பென்சர் ஜான்சன் இதுவரை ஏழு போட்டிகளில் ஐந்தில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


சமீர் ரிஸ்வி - ரூ 8.40 கோடி


சமீர் ரிஸ்வி ஐபிஎல் 2024 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 8.40 கோடிக்கு வாங்கப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு பெரிதாக பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்வில்லை. 


ரிலீ ரோசோவ் - ரூ 8 கோடி


இந்த சீசனுக்கு முன்னதாக ரிலீ ரோசோவை பஞ்சாப் கிங்ஸ் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. முதல் ஆறு போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை.  தனது முதல் போட்டியில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 


ரோவ்மேன் பவல் - ரூ. 7.40 கோடி 


2024 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல் அணியால் ரூ. 7.40 கோடிக்கு எடுக்கப்பட்டார் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரோவ்மேன் பவல்.  இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய பவல் 26 மற்றும் 11 ரன்கள் எடுத்துள்ளார்.


ஷாருக்கான் - ரூ. 7.40 கோடி


ஆல்ரவுண்டர் ஷாருக்கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 7.40 கோடிக்கு வாங்கியது. இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஷாருக் 14 மற்றும் 0 ரன்கள் எடுத்துள்ளார்.


மேலும் படிக்க | தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ