ஐபிஎல் 2024 தொடர் பிளே ஆப் சுற்றுகளுக்கு முன்னேறும் அணிகளை தீர்மானிக்கும் இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. அதாவது முதல் பாதி ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்து, இரண்டாவது பாதி ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகளும் விளையாட உள்ளன. இதில் விராட் கோலி விளையாடும் ஆர்சிபி அணியின் நிலை தான் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடியிருக்கும் எட்டு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் புள்ளிப் பட்டியலில் வெறும் இரண்டு புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் அணி டேபிள் டாப்
தற்போது ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கேகேஆர் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று எட்டு புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும், SRH அணி 6 போட்டிகளில் 4 வெற்றி பெற்று நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த நான்கு அணிகளுக்கும் பிளேஆஃப் சுற்றுக்கான இடங்களை உறுதி செய்யவில்லை என்றாலும், இப்போதைய நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ள அணிகளாக உள்ளன.
6 புள்ளிகளுடன் இருக்கும் நான்கு அணிகள்
10 அணிகளில் நான்கு அணிகள் 8 புள்ளிகளுடனும், ஆறு புள்ளிகளுடன் மூன்று அணிகளும் இருக்கின்றன. எல்எஸ்ஜி, டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகள் பெற்றுள்ளன. எல்எஸ்ஜி அணி மட்டும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. மற்ற அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளதால், எல்எஸ்ஜி புள்ளிப் பட்டியலில் முன்னேற ஒரு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எத்தனை புள்ளிகள் வேண்டும்?
புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது 16 புள்ளிகள் தேவைப்படும். இந்த புள்ளியை எட்டிப் பிடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதும், மற்ற அணிகள் இன்னும் கூடுதல் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. அதாவது, KKR, CSK மற்றும் SRH இங்கிருந்து இன்னும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். 6 புள்ளிகள் பெற்றுள்ள நான்கு அணிகள் மீதமுள்ள ஏழு போட்டிகளில் 5ல் வெற்றி பெற வேண்டும்.
ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு
ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது என்றாலும், அது மிக மிக கடினமான வாய்ப்பு ஆகும். இரு அணிகளும் எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்க நேரிடும், அல்லது ரன்ரேட் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் நாளை நடைபெறும் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் வாழ்வா? சாவா? போட்டியில் களமிறங்க உள்ளது.
மேலும் படிக்க | IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த 'பலசாலி' பேட்டர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ