இவங்க தான் கில்லி... 40 வயசுக்கு அப்புறமும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த 5 வீரர்கள்!

IPL History: ஐபிஎல் தொடர் வரலாற்றில் தங்களது 40 வயதிற்கு பின்னரும் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்களை இதில் காணலாம். 

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. 17வது ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

 

1 /7

ஐபிஎல் என்றாலே அது திறமைகளை அடையாளம் காணும் தொடர் எனலாம். இதுவரை இந்தியாவுக்கு பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா போல் பல சிறப்பான வீரர்களை ஐபிஎல் போட்டிதான் அடையாளம் காட்டியது. இளம் வீரர்களை அடையாளம் காண்பதை போல் சீனியர் வீரர்களின் அனுபவத்தை வெளிகாட்டும் இடமாகவும் ஐபிஎல் இருந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. உதாரணத்திற்கு, வாட்சன், ராயுடு, ராபின் உத்தப்பா ஆகியோரை கூறலாம்.   

2 /7

அந்த வகையில், ஐபிஎல் தொடர் வரலாற்றில் தங்களது 40 வயதுக்கு பின் அதிக ரன்களை குவித்த டாப் ஐந்து பேட்டர்களின் பட்டியலை இங்கு காணலாம். இது நேற்றைய சிஎஸ்கே - லக்னோ போட்டி வரையிலான புள்ளிவிவரம் ஆகும்.

3 /7

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 40 வயதை அடைந்துபின், ஐபிஎல் தொடரில் மட்டும் 164 ரன்களை குவித்துள்ளார்.   

4 /7

டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட அணியை தலைமையேற்று நடத்திய ஆடம் கில்கிறிஸ்ட் ஐபிஎல் தொடரில் 40 வயதை எட்டிய பின்னரும் 466 ரன்களை குவித்தார்.   

5 /7

தற்போது இந்திய சீனியர் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிக்காக விளையாடினார். அவர் 40 வயதை எட்டிய பின்னர் ஐபிஎல் தொடரில் 471 ரன்களை குவித்தார்.   

6 /7

யூனிவெர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் டி20இல் படைக்காத சாதனையே இல்லை எனலாம். அந்த வகையில், ஆர்சிபி, பஞ்சாப் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் தனது 40 வயதை தாண்டிய பின்னரே 481 ரன்களை குவித்தார்.  

7 /7

இந்த பட்டியலில் இன்னும் விளையாடி வருபவர் மகேந்திர சிங் தோனிதான். இவர் தனது 40 வயதுக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் 500 ரன்களை குவித்துள்ளார். இந்த பட்டியலில் முதல்முறையாக 500 ரன்களை தோனி பதிவு செய்துள்ளார். இன்னும் 7 லீக் போட்டிகள், பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.