ஐபிஎல் 2022ன் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளது.  நடப்பு சாம்பியன் ஆனா சென்னை அணியும், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியும் பிளே ஆப்பில் இருந்து முதல் இரண்டு அணிகளாக இந்த முறை வெளியேறியுள்ளது.  கடந்த ஆண்டும் மும்பை அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெறவில்லை.  டெல்லி, கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த கடுமையான போட்டியில் ஆர்சிபி அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றது.  மேலும், குஜராத், லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்... ரசிகர்களுக்கு சொல்லிய செய்தி


இதுவரை நடைபெற்ற 14 வருட ஐபிஎல் பிளே ஆப்பில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.  சுரேஷ் ரெய்னா 714 ரன்களும், தோனி 522 ரன்களும் அடித்துள்ளனர்.  இதற்கு அடுத்த இடங்களில் ஷேன் வாட்சன்( 389), மைக்கேல் ஹஸ்ஸி (388), முரளி விஜய் (364), டுவைன் ஸ்மித் (356), ஃபாஃப் டுப்ளெசிஸ் (348) ஆகியோர் உள்ளனர்.  இதில் ஆர்ச்சர்யமான விஷயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஆவர்.  இதுவரை நடைபெற்ற 14 ஐபிஎல் சீசன்களில் 13 முறை சென்னை அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது.  



இன்று நடைபெற உள்ள ஐபிஎல் 2022 முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும், தோல்வி பெரும் அணி எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.  இந்த வருட ஐபிஎல்லிற்கு புதிதாக வந்துள்ள குஜராத் அணி பைனல் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.   கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


மேலும் படிக்க | மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்! ஆர்சிபி அணியில் விளையாடுவாரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR