மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்! ஆர்சிபி அணியில் விளையாடுவாரா?

ஐபிஎல் 2023 போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 24, 2022, 01:30 PM IST
  • மீண்டும் ஆர்சிபி அணியில் ஏபி டி வில்லியர்ஸ்?
  • அடுத்த ஆண்டு ஐபிஎல்-ல் விளையாட விருப்பம்.
  • ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி.
மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்! ஆர்சிபி அணியில் விளையாடுவாரா?   title=

தென்னாப்பிரிக்க அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ், அடுத்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாட உள்ளதாக தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் டி வில்லியர்ஸ் விளையாடவில்லை.  கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனான ஏபி டி வில்லியர்ஸ் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

ABdeVilliers

மேலும் படிக்க | இந்திய அணியில் இடம் பெறாததால் கடுப்பான இளம் வீரர்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இதுவரை சாம்பியன்ஷிப்பை வெல்லாத மூன்று முன்னாள் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளில் ஒன்றாகும். இதற்கிடையில், கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்த ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார்.  மேலும் கேப்டன் விராட் கோலியும் கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.   இது அணிக்கு மிகவும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.  இருப்பினும் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2011-ல் டி வில்லியர்ஸை அணியில் சேர்த்தது.  ஆர்சிபி அணியில் 11 சீசன்களில் விளையாடி உள்ளார்.  ஆர்சிபி அணிக்காக டி வில்லியர்ஸ் 156 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 4,491 ரன்கள் குவித்தார். 

ABdeVilliers

‘அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் இணைவேன்’: ஏபி டி வில்லியர்ஸ்

"சந்தேகத்திற்கு இடமின்றி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வேன். நான் எந்த பதவியில் பணியாற்றுவேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் திரும்புவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.  நான் திரும்பி வர விரும்புகிறேன், நான் அதை எதிர்நோக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  இதனால் தற்போது ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  டி வில்லியர்ஸ் தனது ஐபிஎல் போட்டிகளில் 41.20 சராசரியை வைத்துள்ளார், அதிகபட்சமாக 133 ரன்கள் அடித்துள்ளார்.  

மேலும் படிக்க | 2022 ஐபிஎல்: அடேங்கப்பா.. சிக்ஸரில் இப்படியொரு சாதனையா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News