40.2 ஓவரில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் மற்றும் யூசுவெந்திர சஹால் தலா இரண்டு விக்கெட்டும், ஷமி மற்றும் கெதர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வெற்றி மூலம் இந்திய ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.


 



அடுத்த போட்டி வரும் சனவரி 28 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. 



13:45 26-01-2019
தற்போது நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 28 ஓவர் முடிவில் 156 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 168 ரன்கள் தேவை



13:35 26-01-2019
டோம் லதாம் 34(32) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 26 ஓவர் முடிவில் 144 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 179 ரன்கள் தேவை



13:05 26-01-2019
ரோஸ் டெய்லர் 22(25) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 17.1 ஓவர் முடிவில் 100 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 225 ரன்கள் தேவை



12:58 26-01-2019
கொலின் முன்னரோ 31(41) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 17 ஓவர் முடிவில் 100 ரன்கள் எடுத்துள்ளது.


 




12:22 26-01-2019
இரண்டாவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. கேன் வில்லியம்சன் 20(11) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். 
தற்போது நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 8 ஓவர் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ளது.



12:11 26-01-2019
முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. மார்டின் குப்தில் 15(16) ரன்கள் எடுத்து  அவுட் ஆனார். இந்த விக்கெட்டை புவனேஷ்வர் குமார் கைப்பற்றினார். தற்போது நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ஓவரில் 25 ரன்கள் எடுத்துள்ளது.


 




இன்று நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே இரண்டாது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. எம்.எஸ். தோனி* 48(33) மற்றும் கேதர் ஜாதவ்* 22(10) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ட்ரென்ட் போல்ட் மற்றும் லோக்கி பெர்குசன் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர். 


நியூசிலாந்து அணி வெற்றி பெற 325 ரன்கள் தேவை என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.