இந்தியாவுக்கு ஐசிசியின் அனைத்து விதமான  கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் விக்கெட் கீப்பருமான மிஸ்டர் கூல் தோனி, தனது 300_வது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 300_வது ஒருநாள் போட்டியில் தோனி விளையாடினார். இந்த போட்டியில் 49 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 


அவருடைய சாதனைகளை பார்ப்போம்:- 


> 73 இன்னிங்ஸ்களில் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 


> ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள்.


> அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர். மொத்தம் 737.


> ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 200 சிக்ஸர்களைத் அடித்த இந்திய வீரர்.


> ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரன் சேஸிங்கில் முதலிடம். தோனியின் சராசரி 101.84. ஆகும்.