பாகிஸ்தான் வீரருக்கு எம்.எஸ். தோனி அனுப்பிய பரிசு!
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃபுக்கு எம்எஸ் தோனி பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப்க்கு ( Haris Rauf), இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தனது பெயர் மற்றும் நம்பர்ருடன் கூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார். இதற்கு ஹரிஸ் பரிசு வழங்கிய தோனி மற்றும் சிஎஸ்கே அணி மேலாளருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். "லெஜண்ட் & கேப்ட் கூல் எம்எஸ் தோனி (msdhoni) எனக்கு இந்த அழகான ஜெர்சியை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார். இதற்கு அனைவருக்கும் நன்றி" என்று ட்வீட் செய்துள்ளார் ஹரிஸ்.
தோனிக்கு எதிராக ரவுஃப் விளையாட வாய்ப்பே இல்லை என்றாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஸ்டேஜில் இரு அணிகளும் விளையாடியபோது ரவுஃப் பாகிஸ்தானின் பிளேயிங் லெவன் அணியில் இருந்தார். குறிப்பிடத்தக்க வகையில், தோனியும் இந்திய அணியின் ஆலோசகராக இருந்தார். துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த தோனி, இப்போது இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வரவிருக்கும் 15வது சீசனில் விளையாட உள்ளார். இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக CSK அணி தோனியை 12 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. மறுபுறம், ரவூஃப் தற்போது பிக் பாஷ் லீக்கின் (பிபிஎல்) நடப்பு சீசனுக்காக ஆஸ்திரேலியாவில் உள்ளார். 28 வயதான ரவூஃப் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ALSO READ | ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளையும் மும்பையில் மட்டும் நடத்த திட்டம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR