இந்தியன் பிரீமியர் லீக்கின் அடுத்த சீசனுக்கான ஏலம் அதாவது ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2024க்கான கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியை ஐந்து முறை சாம்பியனாக்கிய ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை அணி நீக்கியுள்ளது. ரோஹித் சர்மா இப்போது அடுத்த வரும் ஐபிஎல் சீசனில் ஒரு வீரராக மட்டுமே விளையாடுவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கிய மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா ரியாக்ஷன்


இது ஐபிஎல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியிருக்கும் இந்த சூழலில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியை அதிக நாட்கள் வழிநடத்திய கேப்டன் என்ற அங்கீகாரம் தோனிக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட எம்எஸ் தோனி ஐபிஎல் கேப்டனாக அதிக ஆண்டுகள் இருப்பார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 2021 ஆம் ஆண்டிலேயே ஐபிஎல் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலி முடிவு செய்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தார். ரோஹித் சர்மாவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதே 10 வருடங்கள் கேப்டனாக இருந்தார். இருப்பினும், இப்போது இரண்டு வீரர்களும் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார்கள். 


அதே நேரத்தில், 2008-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் தோனி, 2024-ம் ஆண்டிலும் கேப்டனாக இருக்கப் போகிறார். இப்படி பார்த்தால், ஐபிஎல் தொடரில் இவ்வளவு காலம் கேப்டனாக இருந்த ஒரே கேப்டன் எம்எஸ் தோனிதான். ஒருமுறை ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவர் ஒரு சீசனில் மட்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அதாவும் அந்த சீசனின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பு அவரிடம் மீண்டும் வந்தது.


இருப்பினும், ஐந்து முறை அணியை சாம்பியனாக்கிய தோனி, ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளிலும், அதிக சீசன்களிலும் கேப்டனாக இருந்த வீரர். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை விட MS தோனிக்கு ஐபிஎல் கேப்டனாக அதிக ஆண்டுகள் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.


மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எத்தனை வீரர்கள் தேவை... பர்ஸில் எவ்வளவு இருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ