புதுடெல்லி: IPL அணிகளில் சென்னை சூப்பர் கிங்சுக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. ஒரு குடும்பத்தைப் போல இருக்கும் இந்த அணியின் ரசிகர்களும் மிகவும் வித்தியாசமானவர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் IPL-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் சகாவான சுரேஷ் ரெய்னா, தோனியைப் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கூறியுள்ளார். 


முதன் முறையாக தோனி CSK அணிக்கு விளையாட IPL ஏலத்தில் தோனி வாங்கப்பட்டபோது அவரது ரியாக்ஷன் எப்படி இருந்தது என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 


ரெய்னா சுவாரசியமான விஷயத்தைப் பற்றி கூறினார் 
சுரேஷ் ரெய்னா 'பிலீவ்' என்ற புத்தகத்தில் இந்த விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார். முத்தைய்யா முரளீதரன், ஸ்டீபன் ஃப்ளெமிங், மேத்யு ஹேடன் போன்ற வீரர்களுடன் விளையாட மகேந்திர சிங் தோனி (MS Dhoni) மிகவும் ஆர்வமாக இருந்தார் என்று சுரேஷ் ரெய்னா இந்த புத்தகத்தில் கூறியுள்ளார். தோனியுடன் ஒரே அணிக்காக விளையாடுவதில் தானும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இருந்ததாகவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 


ALSO READ: IPL 2021: CSK அணியின் உருக்கமான வீடியோ, சோகத்தில் ரசிகர்கள்!


சுரேஷ் ரெய்னாவின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? 


சுரேஷ் ரெய்னா (Suresh Raina) கூறுகையில், 'ஐ.பி.எல் ஏலத்தில் நான் எந்த அணிக்காக விளையாடுவேன் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தேன். நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவேன் என்று தெரிந்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நானும் தோனியும் சென்னைக்காக ஒன்றாக விளையாடுவோம் என்று எனக்குத் தெரிந்தவுடன் என் உற்சாகத்திற்கு அளவே இல்லை' என்றார். 


ஐபிஎல் தோனி மற்றும் ரெய்னாவின் உறவை பலப்படுத்தியது 


சுரேஷ் ரெய்னா, "IPL ஏலத்தில் வாங்கப்பட்ட பின்னர், நான் உடனே தோனியுடன் பேசினேன். அவருடைய அன்றைய ரியாக்ஷன் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தோனி என்னிடம், 'ஜாலியா இருக்கும் பாரு' என்றார்." என்று கூறியுள்ளார். எனக்கும் தோனிக்கும் இடையே ஐபிஎல் ஒரு வலுவான உறவை ஏற்படுத்தியுள்ளது என்று ரெய்னா மேலும் தெரிவித்தார்.


ALSO READ: ஸ்டம்புக்கு பின்னால் எம்.எஸ். தோனியை மிகவும் மிஸ் செய்கிறேன்: குல்தீப் யாதவ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR