ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  இன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் ரூ.8 கோடிக்கு வாங்கியது. மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மேன் பவல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ.2.8 கோடிக்கும், நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேயை ரூ.1 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடனான கடுமையான ஏலப் போருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் டேனியல் சாம்ஸும் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2.6 கோடிக்கு வாங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரெய்னாவை எந்த அணியும் எடுக்காதது ஏன்?


முழங்கை அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால், ஆர்ச்சர் இந்த சீசனில் விளையாட வாய்ப்பில்லை. இருப்பினும் மும்பை அவரை அவரை 8 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஆர்ச்சர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார்.  ஏற்கனவே மும்பை அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உள்ளார்.  தற்போது கூடுதல் பலமாக ஆர்ச்சரும் இணைந்துள்ளார்.  ட்ரெண்ட் போல்டை மும்பை அணி ஏலத்தில் தவறிவிட்டது.


 மும்பை இதுவரை வாங்கிய வீரர்கள்:


இஷான் கிஷன் (ரூ 15.25 கோடி)


டெவால்ட் ப்ரீவிஸ் (ரூ 2.8 கோடி)


பசில் தம்பி (ரூ 30 லட்சம்)


எம் அஸ்வின் (ரூ 1.6 கோடி)


ஜெய்தேவ் உனத்கட் (ரூ 1.3 கோடி)


மயங்க் மார்கண்டே (ரூ 65 லட்சம்)


என் திலக் வர்மா (ரூ 1.70 கோடி)


சஞ்சய் யாதவ் (ரூ 50 லட்சம்)


ஜோஃப்ரா ஆர்ச்சர் (ரூ 8 கோடி)


டேனியல் சாம்ஸ் (ரூ 2.6 கோடி)


டைமல் மில்ஸ் (ரூ 1.5 கோடி)


டிம் டேவிட் (ரூ 8.2 கோடி)


ரிலே மெரிடித் (ரூ 1 கோடி)


மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR