மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் தவறவிட்ட 3 ஸ்டார் பிளேயர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் தவறவிட்ட 3 ஸ்டார்பிளேயர்களை பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி டிம் டேவிட்டை எடுத்தற்கு பதிலாக இந்த 3 வீரர்களை எடுத்திருக்கலாம்
ஷிம்ரோன் ஹெட்மயர்
ராஜஸ்தான் அணிக்காக 8.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷிம்ரோன் ஹெட்மயர் அசத்தலாக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு பினிஷர் ரோலில் பக்காவாக விளையாடி வருவதால், ராஜஸ்தான் அணி இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இன்னும் சில போட்டிகளில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற வேண்டும். டிம் டேவிட்டுக்கு செலவழித்த தொகையை ஷிம்ரோன் ஹெட்மயருக்கு முயற்சித்திருந்தால், சிறப்பான வீரர் அந்த அணிக்கு கிடைத்திருப்பார்.
மேலும் படிக்க | வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகையின் ரியாக்ஷன் - அவர் யார் தெரியுமா?
லியாம் லிவிங்ஸ்டோன்
பஞ்சாப் அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்றாலும், அந்த அணியில் தனித்து தெறிகிறார் லியாம் லிவிங்ஸ்டோன். இங்கிலாந்தைச் சேர்ந்த அவர், இதுவரை 8 இன்னிங்ஸ்களில் 30.62 சராசரியில் 245 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவர் ஜொலிக்கிறார். இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சித்திருந்தால் சிறந்த ஆல்ரவுண்டர் அணிக்கு கிடைத்திருக்க வாய்ப்புண்டு.
ஜேசன் ஹோல்டர்
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருப்பவர் ஜேசன் ஹோல்டர். 4 ஓவர்களை சிறப்பாக வீசக்கூடிய ஹோல்டர், பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடியவர். டிம் டேவிட் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாத நிலையில், ஹோல்டரை அந்த அணி ஏலத்தில் எடுக்க முயற்சி செய்திருக்கலாம். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடுகிறார் ஹோல்டர்.
மேலும் படிக்க | முன்னாள் அணியை பழிக்கு பழி தீர்த்த டெல்லி பவுலர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR