வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகையின் ரியாக்ஷன் - அவர் யார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சப்போர்ட் செய்ய ரசிகையான வந்த ஸ்ருதி துலி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 28, 2022, 12:11 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பெண் ரசிகை
  • இணையத்தில் யார் என தேடும் நெட்டிசன்கள்
  • சிக்சர்களுக்கு வித்தியாசமான ரியாக்ஷன் கொடுத்தார்
வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகையின் ரியாக்ஷன் - அவர் யார் தெரியுமா? title=

பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அம்பத்தி ராயுடுவின் அதிரடியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய பேட்டில் இருந்து சிறப்பான இன்னிங்ஸை பார்த்த ரசிகர்கள், ராயுடுவின் சிக்சர்களுக்கு விதவிதமான ரியாக்ஷன் கொடுத்த ரசிகையையும் மறக்கவில்லை. மஞ்சள் நிற டாப்பில் மைதானத்துக்கு வந்த அந்த ரசிகை, யார் என்பது தான் ரசிகர்களின் இப்போதைய கேள்வியாக உள்ளது. இதனால், அவருடைய புரோபைலை தோண்டி துருவி வருகின்றனர். 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இமாலய இலக்கை நோக்கி களம் கண்டது. வெற்றிக்கு மிக அருகில் சென்றபோதும், 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் அம்பத்தி ராயுடு ருத்ர தாண்வம் ஆடினார். 39 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ராயுடு, 78 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களும் அடங்கும். 

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் சொதப்பும் இளம் வீரர் - இந்திய அணிக்கு திரும்புவது கடினம்

6 சிக்சர்களும் மெகா சிக்சர்களாக இருந்தன. அவர் அடித்த சிக்சர்களை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வாயைப் பிளந்து பார்த்தனர். அப்போது, புதிதாக மைதானத்துக்கு மஞ்சள் நிற டாப்பில் வந்து சென்னைக்கு சப்போர்ட் செய்த ரசிகையும், அம்பத்தி ராயுடு ஆட்டத்தால் வியப்படைந்தார். பந்து ஒவ்வொரு முறை மைதானத்தைக் கடக்கும்போது விதவிதமான ரியாக்ஷன்களை அள்ளி வீசினார். அவர் யார் என்று விசாரித்தால், பெயர் ஸ்ருதி துலி என தெரியவந்துள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Tuli (@shrutituli)

2013 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா திவா அழகி போட்டியில் மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மாடலாகவும் பிரபலமானார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் 3வது இடம் பிடித்தார். அவர் பல பிராண்ட்களுக்கு மாடலாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தி பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட அசிம் ரியாஸுடன் ஸ்ருதி டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை அணியின் மேட்ச் குறித்து பேசிய ஸ்ருதி துலி, தான் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை என வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | 150 கி.மீ வேகத்தில் ஸ்டம்புகளை தெறிக்க விடும் ஹைதராபாத் புயல் - இந்திய அணி வாய்ப்பு பிரகாசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News