ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் கொல்கதா அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய டெல்லி அணிக்கு, தனி ஒருவராக நம்பிக்கை கொடுத்தார் குல்தீப் யாதவ். கடந்த சீசன்களில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவரை, சிறப்பாக விளையாடவில்லை எனக் கூறி அந்த அணி கழற்றி விட்டது.
Kuldeep Yadav against #DCvKKR #kuldeepyadav pic.twitter.com/M9Qt67aEnQ
— Naman Aror (@NamanArora_) April 28, 2022
மேலும் படிக்க | மேக்ஸ்வெல் கொடுத்த பார்டி - விராட்கோலி போட்ட குத்தாட்டம்
ஏலத்திலும் அவரை எடுக்க முனைப்பு காட்டவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். குல்தீப் யாதவின் பவுலிங் திறமையை கொல்கத்தா அணி சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் அந்த அணியின் முக்கியமான 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தாவின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தார்.
Kuldeep Yadav Vs KKR in IPL 2022 - 8/47 in 7 overs.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 28, 2022
3 ஓவர்களை வீசிய குல்தீப் யாதவ் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர், அதில் 8 விக்கெட்டுகளை கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டுமே எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய குல்தீப் யாதவ் 35 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால், கொல்கத்தா அணியை குல்தீப் இந்த ஐபிஎல் போட்டியில் பழிக்கு பழி தீர்த்துவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.
Kuldeep Yadav to KKR pic.twitter.com/ndHw3hdt1g
— Sagar (@sagarcasm) April 28, 2022
சோஷியல் மீடியா மீம்ஸூகளில் சல்மான், ஸ்பைடர் மேன் என வெவ்வேறு அவதாரங்களில் குல்தீப் யாதவை சித்தரித்து, கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் செயல்பட்ட விதம் குறித்து மெச்சுகின்றனர். போட்டிக்குப் பிறகு பேசிய குல்தீப் யாதவ், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பர்ப்பிள் கேப் யார் வாங்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, யுஸ்வேந்திர சாஹல் வாங்க வேண்டும் எனக் கூறினார். தனக்கு ஏற்பட்ட கடினமான காலங்களில் அவர் சப்போர்ட் செய்ததாகவும் குல்தீப் தெரிவித்தார்.
மேலும் படிக்க | டெல்லி அணிக்கு சேவாக் கொடுத்திருக்கும் முக்கிய டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR