மீண்டும் வலுவான அணியாக மாறிய மும்பை இந்தியன்ஸ்! பிளேயிங் 11 இது தான்!
Mumbai Indians IPL 2024: ஐபிஎல் 2024 போட்டிகள் துவங்க உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலுவான ஒரு ஐபிஎல் அணியாக களமிறங்க உள்ளது.
Mumbai Indians IPL 2024: ஐபிஎல் போட்டிகளில் பலம் வாய்ந்த ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்தது. இதுவரை 5 முறை கோப்பையை வென்று உள்ளனர். இந்த ஆண்டு ஆறாவது ஐபிஎல் கோப்பையை வெல்ல தயாராகி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணி பிளே ஆப் கூட தகுதி பெறாமல் போனது.
காரணம், கடந்த மெகா ஏலத்தில் அவர்களது முக்கிய வீரர்களை மீண்டும் அணியில் எடுக்க தவறியது. ஐபிஎல் 2020 முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் குஜராத் அணியின் கேப்டனாக உள்ள மும்பை அணியின் பழைய வீரரான ஹர்திக் பாண்டியவை மீண்டும் தங்கள் அணியில் எடுத்துள்ளது.
மேலும் படிக்க | IPL 2024: இந்த வருடம் ஐபிஎல்லில் களமிறங்க உள்ள 5 புதிய கேப்டன்கள்!
ஐபிஎல் 2022 மற்றும் 2023ல் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா அணியை திறம்பட வழிநடத்தினார். ஐபிஎல் 2022ல் கோப்பையையும், ஐபிஎல் 2023ல் பைனல் வரை தனது அணியை கொண்டு சென்றார். இந்நிலையில், மும்பை நிர்வாகம் ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கு முன்பு கேப்டன் ரோஹித் ஷர்மாவை பொறுப்பில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கீழ் ரோஹித் சர்மா விளையாட உள்ளார். இந்த ஆண்டு நடைபெற மினி ஏலத்தில் குறிப்பிடத்தக்க வீரர்களை எடுத்து தங்கள் அணியை மீண்டும் பலம் வாய்ந்த அணியாக மாற்றி உள்ளது மும்பை இந்தியன்ஸ்.
டாப் ஆர்டர்
டாப்-ஆர்டரில் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்க உள்ளனர். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இஷானை 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது மும்பை. கடந்த நவம்பர் 2023 முதல் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வரும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் மிகவும் முக்கியமானது.
மிடில்-ஆர்டர்
3வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. அவரைத் தொடர்ந்து திலக் வர்மா மும்பை அணியில் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். பேட்டிங் மட்டும் இன்றி பவுலிங்கிலும் திலக் வர்மா ஓரிரு விக்கெட்டுகளை எடுக்க கூடியவர். அவரை தொடர்ந்து டிம் டேவிட் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் பொறுப்பை ஏற்க உள்ளார். டி20 உலக கோப்பையில் ஹர்திக் இடம் பிடிக்க வேண்டும் என்றால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
பந்துவீச்சு
ஜஸ்பிரித் பும்ரா மும்பை அணிக்கு முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். முதுகு அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் 2023போட்டியில் அவர் விளையாடவில்லை. தற்போது நல்ல பார்மில் இருக்கும் பும்ரா அணிக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவுக்கு ஜோடியாக ஜெரால்ட் கோட்ஸி இருக்கிறார். மேலும், பியூஷ் சாவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
இம்பாக்ட் பிளேயர்
டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் நேஹால் வதேரா ஆகியோர் மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக இருக்க வாய்ப்புள்ளது. நேஹால் ஐபிஎல் 2023ல் சிறப்பாக செயல்பட்டார்.
ஐபிஎல் 2024க்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்ததேச ப்ளெயின் 11: ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரித் பும்ரா, ஜெரல் கோட்ஸி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
இம்பாக்ட் பிளேயர்: நேஹால் வதேரா அல்லது டெவால்ட் ப்ரீவிஸ்
மேலும் படிக்க | IPL 2024: 10 ஐபிஎல் அணிகளின் தலைமை பயிற்சியாளர்களும்... அவர்களின் சாதனைகளும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ