ஐபிஎல் 2022-ன் இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. நேவிமும்பையில் 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது.டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தேவ்தத் படிக்கலும், பட்லரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்க ஜோடி நிலைத்து நிற்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க பொல்லார்ட் ஓவரில் படிக்கல் 15 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.


அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். ஆனால் அவர் 7 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதன் காரணமாக அந்த அணி 56 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.



அதனையடுத்து பட்லரும், மிட்செல்லும் இணைந்தனர். மும்பையின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்ட ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. ஆட்டத்தின் 15ஆவது ஓவரில் மிட்செல் 17 ரன்களில் வெளியேற ஹெட்மயர் களமிறங்கினார்.


மேலும் படிக்க | பந்துவீச்சில் சொதப்பிய ஆர்சிபி... தொடரும் குஜராத் டைட்டான்ஸ் அணியின் வெற்றி


ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து நின்ற பட்லருடன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார்.இரண்டு பேரில் ஹெட்மயர் நிதானம் காட்ட பட்லர் அதிரடியை வெளிப்படுத்தினார். ஹ்ரிதிக் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்கள் அடித்து பட்லர் அரைசதத்தை பதிவு செய்தார். அதே ஓவரில் மேலும் இரண்டு சிக்சர்களை அடித்து பட்லர் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.



அவரை அடுத்து வந்த பராக்கும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க களத்துக்கு வந்த அஷ்வின் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.


ஒருமுனையில் ஹெட்மயர் நிதானம் காட்ட தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய அஷ்வின் கடைசி ஓவரில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 158 ரன்கள் எடுத்தது.


159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே கிஷன் சிக்சர் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.



இரண்டு ஓவர்களுக்கு 22 ரன்களை சேர்த்த இந்த ஜோடி மூன்றாவது ஓவரில் பிரிந்தது. அஷ்வின் ஓவரில் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா 2 ரன்களுக்கு தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.அவரை அடுத்து சூர்யகுமார் யாதவ் இஷன் கிஷனுடன் இணைந்தார்.


மேலும் படிக்க | ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவைப் பற்றித் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்! - HBD-Rohit-Sharma


சூர்யகுமார் நிதானமாக எதிர்கொள்ள கிஷன் மட்டும் அதிரடி காண்பித்தார். பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் 26 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார் கிஷன்.


அடுத்ததாக சூர்யகுமார் யாதவும், திலக் வர்மாவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி ராஜஸ்தான் பந்துவீச்சை நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் எதிர்கொண்டது. தேவைப்பட்ட நேரத்தில் பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை சீராக வைத்திருந்த இந்த இணை 50 ரன்களை 38 பந்துகளில் சேர்த்தது.


சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்த்திருந்த சமயத்தில் சஹால் பந்துவீச்சில் 51 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அவர் வெளியேறிய சில நிமிடங்களில் திலக்கும் வெளியேறினார்.


அதன் பின் பொல்லார்டும், டேவிட்டும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் முனைப்பில் விளையாடினர். ராஜஸ்தானின் பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்ட இந்த ஜோடி கடைசி ஓவரில் பிரிந்தது.பொல்லார்டு 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.


இதனையடுத்து 5 பந்துகளில் 4 ரன்கள் வேண்டும் என்ற சூழலில் பொல்லார்டுக்கு பிறகு வந்த சாம்ஸ் சிக்ஸ் அடித்தார். இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றி ஆகும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR