IPL 2020 Mumbai vs Delhi: இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2020) தொடரின் முதல் தகுதி போட்டி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நுழைந்துள்ளது. இன்று (நவம்பர் 5) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே மோதல் இருந்தது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் (Delhi Capitals) அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே அவுட் ஆனார். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஆடிய அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.  சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மற்றும் இஷான் கிஷன் (Ishan Kishan) இருவரும் அரைசதம் அடித்தனர். டெல்லி அணி சார்பில் அஸ்வின் (Ashwin) மூன்று விக்கெட்டை கைபற்றினார். 


201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி வீரர்கள் யாரும் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார்கள். ரன் எதுவும் எடுக்காமல் மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறியது டெல்லி அணி. முதல் ஓவரை போல்ட் வீசினார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டை எடுத்த அவர், 2வது பந்தில் பிருத்வி ஷா, 5வது பந்தில் ராஹனேவை அவுட் செய்தார் அடுத்த ஓவரை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா, அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவானை அவுட் செய்தார். டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12(8) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரையும் ஜஸ்பிரீத் பும்ரா அவுட் செய்தார்.  


டெல்லி அணியின் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 65(46) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதற்கு பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, அக்சர் பட்டேல் (Axar Patel) மட்டும் 42(33) ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். டெல்லி கேப்பிடல் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 


 



இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறையும் டெல்லி கேப்பிடல் (Delhi Capitals) அணியை லீக் போட்டியில் தோற்கடித்தது. தற்போது முதல் தகுதி போட்டியிலும் MI வெற்றி பெற்றுள்ளது. 


IPL லீக் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தகுதி -1 இல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். அதே நேரத்தில், தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.  எனவே டெல்லி அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது.