உலக கோப்பை டி20 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது.  பாகிஸ்தானி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.  ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து ரன் ரேட் கூடுதலாக வைத்துள்ளது.  நம்பியா அணியும் ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ மாற்றம் இன்றி அதே அணியுடன் களம் இறங்கும் இந்தியா?


நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியடைந்துள்ளது.  இரண்டு அணிகளுமே தோற்கடித்த பெருமை பெற்றுள்ளது பாகிஸ்தான்.  இதனால் இன்று நடைபெறவுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இரு அணிகளுக்கும் அமைந்துள்ளது.  இன்று தோல்வியடையும் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்புள்ளது. 



இதுவரை 16 போட்டிகளில் விளையாடிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  இரு அணிகளுமே சமமான பலத்துடன் உள்ளன.  இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுவதால் டாஸ் வெல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.  இன்றைய போட்டியில் இந்திய அணியில் விளையாடப் போகும் வீரர்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.  கடந்த போட்டியில் இந்திய அணிக்கு ஆறாவதாக ஒரு பவுலிங் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.  இதனை சரிசெய்ய ஹர்திக் பாண்டியா என்று பவுலிங் போடுவார் என்று அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


நியூஸிலாந்து அணியை பொருத்தவரை டிரென்ட் போல்ட், சவுதி போன்ற வீரர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமத்தை கொடுப்பார்கள்.  இவர்களின் மீது பந்துவீச்சை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் பட்சத்தில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளது.


ALSO READ நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று தருவாரா இந்திய அணியின் வீரர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR