விராட் கோலி இந்த தலைமுறையின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவர் இந்திய மக்களால் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மக்களால் நேசிக்கப்படுகிறார். அவர் தனது கிரிக்கெட் ஷாட்களால் ரசிகர்களை ஈர்க்கிறார். பேட்டிங்கில் தனக்கு இருக்கும் திறமையால் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். அவர் இதுவரை ஆற்றியுள்ள சாதனைகள் அதற்கு ஒரு சான்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரால் கோலி (Virat Kohli) தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைவதற்குள் இன்னும் ஏராளமான சாதனைகளை செய்யவுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களை அடித்துள்ளார்.


உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அவரை தங்கள் கிரிக்கெட் நாயகனாக காண்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை கோலி இந்த விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.


இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் (Michael Vaughan) கோலி இளைஞர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தும் அற்புதமான தாக்கத்தைப் பற்றி பேசினார். தனது மகன் கோலியின் பெரிய ரசிகன் என்பதை வெளிப்படுத்தினார். தனது மகன் தூங்கிக்கொண்டிருந்தால் கூட, விராட் பேட்டிங் செய்ய வெளியே வரும்போது தன்னை எழுப்பிவிடுமாறு கூறுவார் என்பதையும் தெரிவித்தார்.


 "என் சிறிய பையன் ஒரு சிறிய விளையாட்டு வீரன். அவன் எப்போதும் என்னிடம் கூறுவது ‘விராட் ஆட வரும்போது ​​என்னை எழுப்புங்கள்’ என்பதுதான்" என்றார் வாகன்.


“விராட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிவிட்டால், என் மகன் வேறு ஏதாவது செய்ய மீண்டும் உள்ளே சென்று விடுவார். அந்த அளவுக்கு குழந்தைகள் மீது விராட் ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ‘அன்புக்கு அப்பா, ஆட்டத்துக்கு விராட் கோலி’ என்று கூட அவர் கிண்டலாக சொல்வதுண்டு. அவரது ஷாட்களை பார்த்து குழந்தைகளுக்கு ஆர்வம் உச்சத்தை எட்டுகிறது. அவர் அனைத்தையும் சர்வ சாதாரணமாக செய்வது மற்றொரு சிறப்பம்சம். அவர் அடிக்கும் ஷாட்டில் பந்து ஸ்டாண்டிற்குள் போகும்போது என் மகன் உட்பட அனைத்து குழந்தைகளும் அதை கொண்டாடுகிறார்கள். அவர் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வீரர், முழுமையான மேதை” என்று வாகன் கிரிக்பஸிடம் விராட்டைப் பற்றி கூறினார்.


ALSO READ: விராட் கோலி துரிதமாக 22,000 சர்வதேச ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்


சிட்னியில் (Sydney) ஞாயிற்றுக்கிழமை இந்தியா ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (ODI), இந்திய அணியின் 390 ரன்களுக்கான சேஸில், கோலி 89 ரன்கள் எடுத்தார். 2020 ஆம் ஆண்டில் கோலி 8 ஒருநாள் போட்டிகளில் நான்கு அரைசதங்களை அடித்தார் - ஆனால் அதை சதமாக மாற்ற முடியவில்லை.


கோலி தவறவிட்ட சதங்களைப் பற்றி கூறுகையில், ​​வாகன், இந்திய ரசிகர்களோ அல்லது யாரும் அதைப் பற்றி கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்று கூறினார். கோலி இன்னும் மிக நல்ல திறமையுடன், நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆகையால் சதமடிப்பது என்பது அவருக்கு சாதாரண விஷயம் தான். ஒரு சதத்தை அடித்த பின்னர், 2,3 சதங்களை அடிக்கும் திறன் அவருக்கு உள்ளது என்றார் வாகன்.


"விராட் கோலியைப் பற்றி நான் கவலைப்படாத ஒரு விஷயம் அவரது பேட்டிங். அவரது பேட்டிங் குறித்து எந்த கவலையும் இல்லை. அவர் ஒரு அற்புதமான வீரர். அவர் அனைத்து ஃபார்மேட்டுகளில் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை” என்று வாகன் கூறினார்.


"அவர் இல்லாமல் இந்தியா ஆடவிருக்கும் அந்த மூன்று டெஸ்ட் போட்டிகளைப் பற்றிதான் நான் கவலைப்படுகிறேன். விராட் கோலி இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா (India) வெல்வது சற்று கடினமாக இருக்கலாம். டெஸ்ட் அணிக்கு அவர் அவ்வளவு முக்கியம்.” என்றார் வாகன். 


ALSO READ: India vs Australia: விராட் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தார் கௌதம் கம்பீர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR