இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்க உள்ளது.  முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.  MS தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நைட் ரைடர்ஸை தோற்கடித்து நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றது. 
இதற்கு பதில் அடி கொடுத்து போட்டியை தொடங்க கொல்கத்தா தயாராக உள்ளது.  ஐபிஎல் போட்டியின் 2022 பதிப்பிற்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற்றது, இது ஒவ்வொரு அணியிலும் சில மாற்றங்களை கொண்டு வந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வெறித்தனப் பயிற்சி- ஸ்டெம்பை இரண்டாக உடைத்த நடராஜன்: வைரல் வீடியோ!


ஏலத்தில் பல விதிமுறைகள் இருந்த போதிலும், ஒவ்வொரு அணியும் தங்களுடைய பழைய வீரர்களை அணியில் எடுக்க ஆர்வம் காட்டினர்.  அந்த வீரர்களில் ஒருவரான டி நடராஜனை 4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் வாங்கியது. ஐபிஎல் போட்டியின் 2020 பதிப்பில் இருந்து நடராஜன் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார், மேலும் காயம் காரணமாக முந்தைய சீசனின் பெரும் போட்டியில் விளையாடாத போதிலும் ஹைதராபாத் அணிக்கு நம்பிகையான ஒரு வீரராக உள்ளார்.  இந்த மாத தொடக்கத்தில், நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைந்தார்.  



பயிற்சியில் நடராஜன் பவுலிங் செய்யும் வீடியோவை ஹைதராபாத் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து.  அதில் தனது வேகத்தில் ஸ்டம்ப்பை உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  இதன் மூலம் தான் பழைய பார்மிற்கு திரும்பி உள்ளதை நடராஜன் தெளிவுபடுத்தி உள்ளார்.   மேலும் தோனி பயிற்சியில் சிஸ்சர்கள் அடிக்கும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை வழங்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.  சமீபத்தில் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, மும்பை அணியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  




முன்னதாக, தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தனது புதிய பயணத்தைத் தொடங்க இந்தியா வந்தார்.  கடந்த ஆகஸ்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர்,  தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி, பேட்டிங் பயிற்சியாளர் பிரையன் லாரா மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் ஆகியோரைக் கொண்ட SRH பயிற்சிக் குழுவில் இணைந்தார். 


மேலும் படிக்க | ரிஷப் பந்தால் ஓய்வு பெறப்போகும் இந்திய வீரர்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR