உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணியின் புதிய கோச்! வில்வித்தையில் இந்தியா
Indian archery recurve team: புதிய பயிற்சியாளரை இந்திய வில்வித்தை சங்கம் நியமித்துள்ளது! உலகக் கோப்பை போட்டிகள் எதிர்வரும் நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இந்திய விளையாட்டு உலகம் தொடர்பான ஒரு பெரிய செய்தி இந்திய விளையாட்டுத் துறைக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. வில்வித்தை ரிகர்வ் அணியின் தலைமை பயிற்சியாளராக பேக் வோங் கீ நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற இத்தாலியின் செர்ஜியோ பகானிக்கும், இந்திய வில்வித்தை சங்கம் பெரிய பொறுப்பை வழங்கியுள்ளது.
இந்திய வில்வித்தை சங்கம் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பாக் வோங் கீ, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக ரிகர்வ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் பெண்கள் தனிநபர் மற்றும் குழுப் பிரிவுகளில் தனது நாட்டின் இரட்டை தங்கப் பதக்கத்தை வென்ற தென் கொரிய வீராங்கனை கே வோங், துருக்கியின் அன்டலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்காக இந்திய அணிக்கு பயிற்சியளிப்பார்.
விளையாட்டுத் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் அரசு
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இந்தியா வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. AAI இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற இத்தாலியின் செர்ஜியோ பாக்னியையும் இந்த ஆண்டு இந்திய அணியுடன் இணைத்துள்ளது.
அவர் துருக்கி உலகக் கோப்பையில் இந்திய வில்வித்தை அணியை வழிநடத்துவார். பாக் வோங் கீ, இதற்கு முன்னதாக, இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) சிறப்பு மையத்தின் ஒரு பகுதியாக இருந்தார், இப்போது அவர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வில்வித்தையின் உயர் செயல்திறன் இயக்குநரும் துரோணாச்சார்யா விருது பெற்றவருமான சஞ்சீவ் சிங், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
"பாக் வோங் கீ, இந்தியாவின் ரிகர்வ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் ஆசிய விளையாட்டு மற்றும் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் பயிற்சியாளராக இருப்பார். இந்திய வில்வீரர்களுடனான புரிதல் மற்றும் அனுபவத்தைப் பார்த்து, அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று சஞ்சீவ் சிங் கூறினார்.
இந்திய வில்வித்தை அணியில் புதிய பெயர்கள்
இந்த உலகக் கோப்பையில் பெரும்பாலான ஜூனியர் வீரர்களுக்கு இந்தியா வாய்ப்பு அளித்துள்ளதால், வரவிருக்கும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய வில்வித்தை அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2010) வெள்ளிப் பதக்கம் வென்ற தருண்தீப் ராய், இரண்டு முறை ஒலிம்பியன் அதானு தாஸ் மற்றும் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற கூட்டு வில்வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் ஆகிய மூவரைத் தவிர, இந்திய அணியில் சில புதிய பெயர்கள் உள்ளன.
அணிகள்:
ரிகர்வ் ஆண்கள் அணி: பி தீரஜ், அதானு தாஸ், தருண்தீப் ராய், நீரஜ் சவுகான்.
ரிகர்வ் பெண்கள் அணி: பஜன் கவுர், அதிதி ஜெய்ஸ்வால், அங்கிதா பகத், சிம்ரஞ்சித் கவுர்.
கூட்டு அணி: பிரதமேஷ் ஜோஹர், ரஜத் சவுகான், ஓஜஸ் தியோட்டலே, ரிஷப் யாதவ்.
மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மகளிர் அணியின் ஜெர்சியில் மும்பை இந்தியன்ஸ் - ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ