மின்சாரம் தாக்கி தேசிய மல்யுத்த வீரர் மரணம்
தேசிய மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள மைதானத்தில் தேசிய மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
மைதானத்தில் உள்ள கட்டடங்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணத்தால் இவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது என ஜார்க்கண்ட் மல்யுத்த சங்கத்தின் தலைவர் போலாநாத் சிங் தெரிவித்தார். மேலும், வீரரின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அளிக்கப்பட்டுள்ளது.