ஆசிய விளையாட்டு போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 9-ஆம் நாளான இன்று ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.03m தொலைவினை எட்டி தங்கம் வென்றுள்ளார்.


ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள முதல் தங்கம் இதுவாகும். மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், ஒரே எடிசனில் ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.



இந்த வெற்றியின் மூலம் இந்தியா பெற்றுள்ள 8 தங்கங்களுடன் (13 வெள்ளி, 33 வெண்கலம்) பதக்கப்பட்டியலில் 41 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் உள்ளது.


85 தங்கம் உள்பட 190 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது!